search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டார் கலைகள்"

    • தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணைபேராசிரியர் ஆதித்தன் கையெழுத்து சுவடிகளும், வரலாற்று புனரமைப்பும் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
    • கத்தார் நாட்டின் பிர்லா பொதுப்பள்ளி ஆசிரியர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி நாட்டார் கலைகள் குறித்து உரையாற்றினார்.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி தமிழ் உயராய்வு மையம் சார்பில் தமிழ் நாட்டார் கலைகளும், வரலாற்று புனரமைப்பும் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் கே.எஸ். மணி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பொருளாளர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் இளம்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜசேகர் தலைமை உரை ஆற்றினார். கல்லூரி செயலாளர் ராஜன் மற்றும் கல்லூரி அகதர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டி.சி.மகேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணைபேராசிரியர் ஆதித்தன் கையெழுத்து சுவடிகளும், வரலாற்று புனரமைப்பும் என்னும் தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து கத்தார் நாட்டின் பிர்லா பொதுப்பள்ளி ஆசிரியர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி நாட்டார் கலைகள் குறித்து உரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் லட்சுமணன் கலந்து கொண்டார். கருத்தரங்கத்தை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ் துறை பேராசிரியை டாக்டர் பொன்மலர் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள் டாக்டர் கவியரசு, செந்தில்குமார், ராமகுமார், ரத்னாகரன், கார்மல் சர்மிளா, சாந்தினி, சிவபிரசாத், சைலா , ஷீலா பெனடிக், ஜெஸ்ஸி, சுதர்சன் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×