search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்ல தூக்கத்திற்கான வழி"

    • நீலநிற ஒளி உங்களது தூக்கத்தை தொந்தரவு செய்யும்.
    • உடலுழைப்பு நன்றாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

    தூக்க மாத்திரை உபயோகிக்காமல் தூங்குவதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. இதற்கு சில விஷயங்களை நீங்கள் முதலில் செய்தாக வேண்டும். தூங்கப் போகும் நேரத்தையும் எழுந்திருக்கும் நேரத்தையும் முடிவு செய்து, அந்த நேரத்திற்கு சரியாக தூங்கி எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். வார நாட்களில் மட்டுமல்லாமல் விடுமுறை நாட்களில் கூட அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள்.

    தூக்கம் சரியாக வராததற்கு மூன்று முக்கிய காரணங்களை சொல்லலாம்.

    1) எதையோ ஒன்றை யோசித்துக் கொண்டு அதையே மனதில் நினைத்துக் கொண்டு அதையே மனதில் போட்டுக் கசக்கிக்கொண்டு அதிலேயே பயணம் செல்வது

    2) சிறியதோ, பெரியதோ உங்கள் உடலில் ஏதோ பிரச்சினை. அந்த பிரச்சினை நம்முடைய எதிர்காலத்தை பாதித்துவிடுமோ என்ற பயத்திலேயே இருப்பது

    3) தூங்கும் இடம், சுற்றுப்புற சூழ்நிலை சரியாக இல்லாமல் இருப்பது. ஆழ்ந்த தூக்கம் வர கீழ்க்கண்டவற்றை கடைப்பிடிப்பது நல்லது.

     தினமும் தூங்கப்போகும் முன்னர் மிதமான சுடு நீரில் குளியல் போடுவது, பிடித்த புத்தகத்தை வாசிப்பது, சிறிது நேரம் தியானம் பண்ணுவது இப்படி ஏதாவது ஒன்றை தினமும் செய்யுங்கள்.

    செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர், டெலிவிஷன் போன்ற எலெக்ட்ரானிக் கருவிகளை இரவு நேரங்களில் உபயோகப்படுத்தாதீர்கள். இவைகளில் இருந்து வெளியாகும் நீலநிற ஒளி உங்களது தூக்கத்தை தொந்தரவு செய்யும்.

    பகல் நேரத்தில் உடலுழைப்பு நன்றாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கடின உடலுழைப்பு எப்பொழுதுமே ஒரு நல்ல ஓய்வை விரும்பும். அந்த ஓய்வை நாம் தூக்கமாக மாற்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    காபின் கலந்தபானங்கள் (காபி) தூக்கம் வரவிடாமல் தடுக்கும். இரவு நேரங்களில் காபி குடிப்பதைத் தவிருங்கள். நீங்கள் தூங்கும் அறையை முடிந்தவரை இருட்டாக்கி, அமைதியாக்கிக் கொள்ளுங்கள். உடலுக்கு இதமான வெப்ப நிலைக்கு அறையை தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

    படுக்கை, தலையணை,பெட்ஷீட், படுக்கை அறை போன்றவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். அதிக வெளிச்சமுள்ள விளக்கொளி படுக்கை அறையில் வேண்டாம். படுக்கப்போகும் முன் கால்களுக்கு நல்லதொரு மசாஜ் எடுத்துக் கொள்ளுங்கள்.

    நீங்கள் தூங்க ஆரம்பிக்கும் போது, எதையோ ஒன்றை நினைக்க ஆரம்பிக்கிறது உங்கள் மனது. சில நினைவுகள் நல்லதாக இருக்கலாம். சில நினைவுகள் கெட்டதாக இருக்கலாம். எதை நினைத்தாலும் அதைப்பற்றிய சிந்தனைகள் மனதில் வந்துகொண்டே இருக்கும். எனவே இதைத் தவிர்க்க எதைப்பற்றியும் யோசிக்காமல் மனதை காலியாக வைத்துக் கொள்ளுங்கள்.

    50,49,48 என்று எண்களை தலைகீழாக சொல்லிப் பாருங்கள். மனம் அதை ஒழுங்காக தவறில்லாமல் சொல்ல வேண்டும் என்பதில் ஈடுபட ஆரம்பித்துவிடும். ஆக மற்ற சிந்தனைகள் வராது. தூக்கமும் சிறிது நேரத்தில் தானாக வந்துவிடும்.

    ×