search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நண்பன் கைது"

    • ஜாமீனில் வெளிய வந்த பிரசாத் வழக்கு விசாரணை செலவிற்காக தனது நண்பன் பிரசாந்திடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார்.
    • மாயமான நண்பனை தேடுவது போல் பிரசாந்த் நடித்தார். நண்பன் குடும்பத்துக்கு தேவையான உதவி செய்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், மேக்லூர் அடுத்த கேந்திராவை சேர்ந்தவர் பிரசாத் (வயது 33). இவரது மனைவி ரமணி (30). சைத்ரிக்( 7) சைத்திரிகா (7) என்ற இரட்டை மகள்கள், ஸ்வப்னா (27), ஸ்ரவந்தி (24) என்ற தங்கைகளும் இருந்தனர்.

    அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் பிரசாந்த் (வயது 30). இருவரும் உயிருக்கு உயிராக பழகி வந்தனர்.

    அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் நண்பர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஆச்சரியப்படும் அளவிற்கு இருந்தனர். மனைவி, மகள்களுடன் வாழ்ந்த பிரசாத்துக்கு இளம்பெண் ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இளம்பெண் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஊர் பெரியவர்கள் பிரசாத் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். மேலும் போலீசார் பிரசாத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ஜாமீனில் வெளிய வந்த பிரசாத் வழக்கு விசாரணை செலவிற்காக தனது நண்பன் பிரசாந்திடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார்.

    சில மாதங்கள் கழித்து பிரசாந்த் தனக்கு தரவேண்டிய கடன் பாக்கிக்காக பிரசாத் வீட்டை தனது பெயருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என கூறினார். பிரசாத் வீட்டை நண்பன் பெயருக்கு மாற்றி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். திடீரென பிரசாத் வீட்டை காலி செய்து கொண்டு காமிரெட்டி மாவட்டம், பல்வஞ்சா என்ற இடத்திற்கு குடிபெயர்ந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாந்த் நண்பனின் ரூ.25 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை அடைய வேண்டும். பிரசாத் உயிருடன் இருக்கும் வரை சொத்துக்களை அடைய முடியாது என எண்ணி அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி கடந்த மாதம் 28-ந் தேதி பிரசாத் வீட்டிற்கு பிரசாந்த் சென்றார். டிச்சப்பள்ளி புறநகர் பகுதிக்கு பிரசாத்தை அழைத்துச் சென்று அங்கு அவரை வெட்டி கொலை செய்து குழி தோண்டி புதைத்தார்.

    பின்னர் மாயமான நண்பனை தேடுவது போல் பிரசாந்த் நடித்தார். நண்பன் குடும்பத்துக்கு தேவையான உதவி செய்தார்.

    இதையடுத்து பிரசாத்தின் மனைவியை ஏமாற்றி காரில் அழைத்துச் சென்று கோதாவரி ஆற்றில் தள்ளி கொலை செய்தார்.

    தண்ணீரில் அவர் அடித்து செல்லப்பட்டார். பின்னர் பிரசாத்தின் மகள்கள் சைத்ரிக், சைத்ரிகா ஆகியோரை ஏமாற்றி அழைத்துச் சென்று பால்கோண்டா என்ற இடத்தில் கொலை செய்து முட்புதரில் வீசிவிட்டு வந்தார்.

    மேலும் பிரசாத்தின் மூத்த சகோதரி ஸ்வப்னாவை மேடக் செகுண்டா மலை அடிவாரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்தார்.

    இதேபோல் இளைய சகோதரி ஸ்ரவந்தியை காமெடி சதாசிவ நகர் பூப்பள்ளி என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அவரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு சென்றார்.

    அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவர் எரிக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் சதாசிவ நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் பிரசாந்த் ஸ்ரவந்தியை கொலை செய்து எரித்தது தெரியவந்தது. சினிமாவை மிஞ்சும் இந்த கொடூர சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசாத்தின் தாய் வீட்டில் இருப்பதால் அவரை பிரசாந்த் கொலை செய்ய முயற்சிக்கலாம் என எண்ணி அவரது வீட்டிற்கு சென்றனர்.

    அப்போது பிரசாத்தின் தாய் சுசிலாவை பிரசாந்த் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

    இதனை கண்ட போலீசார் பிரசாந்தை கைது செய்தனர். பிரசாந்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் உயிர் நண்பன் என்றும் பாராமல் அவரது மனைவி, மகள்கள், தங்கைகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். நண்பனின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரது குடும்பத்தையே அடுத்தடுத்து கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவையே உலுக்கி உள்ளது.

    ×