search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடைமுறைக்கு வந்தது"

    • மருத்துவமனையில் பணியாற்றும் நர்சுகள், டாக்டர்கள் இன்று முககவசம் அணிந்து பணிக்கு வந்தனர்.
    • முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் மார்ச் மாதம் வேகமாக பரவத் தொடங்கியது.

    இதன் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாகவே 2 இலக்கில் பதிவாகி வந்த கொரோனோ பாதிப்பு தற்போது 3 இலக்கில் பதிவாகி வருகிறது.

    தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்து றையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    முன்புபோல் முககவசம் அணிய வேண்டும். கை, கால்களை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

    பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றன.

    ஈரோடு மாவட்டத்திலும் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் நர்சுகள், டாக்டர்கள், நோயாளிகள், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    இந்த நடைமுறை இன்று தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் இந்த புதிய நடைமுறை இன்று அமலுக்கு வந்தது.

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் நர்சுகள், டாக்டர்கள் இன்று முககவசம் அணிந்து பணிக்கு வந்தனர்.

    இதேபோல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள், அவர்கள் உடன் இருப்ப வர்கள், உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருபவ ர்கள் முககவசம் அணிந்தி ருந்த னர்.

    இதேபோல் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், சத்தியமங்கலம், கொடுமுடி, பெருந்துறை, பவானி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் ஊழியர்கள், நர்சுகள், டாக்டர்கள், நோயாளிகள் முககவசம் அணிந்திருந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள், நர்சுகள், நோயாளிகள் முககவசம் அணிந்திருந்தனர். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. 

    ×