search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோஷம்"

    • கால சர்ப்ப தோ‌ஷம் உள்ள அனைவருக்கும் திருமண தடை ஏற்படாது.
    • கால சர்ப்ப தோ‌ஷத்திற்கு தகுந்த ஆலோசனையின்றி சுய பரிகாரம் செய்யக் கூடாது.

    திருமணத் தடை: கால சர்ப்ப தோ‌ஷம் உள்ள அனைவருக்கும் திருமண தடை ஏற்படாது. ராகு/கேதுக்கள் நின்ற நிலைக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும். திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7, 8-ல் ராகு- கேதுக்கள் இருந்தால் பாதகத்தை தரும். தசா புக்தி சாதகமாக இருந்தால் திருமணம் உரிய வயதில் நடக்கும்.

    சிலருக்கு காதல் திருமணத்தை நடத்தி இல்வாழ்க்கையில் சங்கடத்தை மிகைப்படுத்தும் அல்லது சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். அதனால் 27 வயதிற்கு மேல் திருமணம் நடத்துவது சிறப்பு.

    பரிகாரம்: ஜனன கால ராகு கேதுக்கள் நிற்கும் நட்சத்திரத்தின் அதிதேவதைகளுக்கு ஜென்ம நட்சத்திர நாளில் அர்ச்சனை செய்து வர வேண்டும். சுவாதி, சதயம், திருவாதிரை, அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் பிரதோ‌ஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால் தோ‌ஷத்தின் வீரியம் குறைந்திடும்.

    புத்திரபாக்கியம் : குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை, தாமதம், அடிக்கடி கருக்கலைதல் பெண் குழந்தைகள் மட்டும் இருப்பது அல்லது ஆண் வாரிசுகள் மட்டும் இருப்பது போன்ற குறைபாடு இருக்கும். சிலருக்கு பெற்ற பிள்ளைகளால் வாழ்நாள் முழுவதும் மனவேதனை இருந்து கொண்டே இருக்கும்.

    பரிகாரம் : கிருத்திகை, விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று திருச்செந்தூர் முருகனை நினைத்து 27 முறை கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும். திருவாதிரை, மகம் நட்சத்திரம் வரும் நாட்களிலும் பாராயணம் செய்யலாம்.

    நோய் : தோ‌ஷத்தின் வீரியம் அதிகமாக இருந்தால் ராகு-கேதுவின் தசா, புத்தி அந்தர காலங்களில் அல்லது 6,8,12-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசா, புக்தி, அந்தர காலங்களில் இனம் புரியாத நோய் அல்லது தீராத நோய் அல்லது ஆயுள் பயம் அதிகமாக இருக்கும்.

    பரிகாரம் : மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் மரண பயம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும், இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்படும், தீராத நோய் தீரும்.

    ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்

    உர்வாருகமிவ பந்தனான் மிருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

    அதிர்ஷ்டம் : நித்திய கண்டம் பூரண ஆயுள் என சிலருக்கு அதிர்ஷ்டக் குறைபாடு மிகுதியாக இருக்கும், பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சினைகள், நிரந்தர தொழில் மற்றும் வேலை இல்லாத நிலை, வறுமை, குடும்பத்தில் மிகுதியான கூச்சல் குழப்பம் , உழைப்பிற்கு தகுந்த ஊதியமின்மை, தொடர் விரயம், வீட்டில் தங்கம் தங்காத கஷ்டம் நிலவும்.

    பரிகாரம் : திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம்: நன்னிலம்குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரரை வழிபட வேண்டும்.

    சாதாரண பாதிப்பை தரும் எந்த தோ‌ஷத்திற்கும் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கால சர்ப்ப தோ‌ஷத்திற்கு தகுந்த ஆலோசனையின்றி சுய பரிகாரம் செய்யக் கூடாது.

    மேலேயே கூறியது போன்ற குறைபாடு இருப்பவர்கள் நம்பிக்கையுடன் குலதெய்வ வழிபாடு, கருட வழிபாடு செய்து கருட சுலோகங்களை படித்து வர பாதிப்பின் சுவடே தெரியாது.

    • விஷ கன்னிகா தோஷம் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.
    • ஒரே ஆறுதல்...ஒரு குழந்தை பாக்கியமாவது கிடைத்துவிடும்.

    விஷ கன்னிகா தோஷம் குறிப்பிட்ட நாள், நட்சத்திரம் , திதி மூன்றும் சேர்ந்து வரும் நாளில் பிறந்து 2, 4, 5, 7,8,12 பாவங்களும், பாவாதிகளும் பாதிப்படையும் நிலையில் மிக மோஷமான பாதிப்பை தருகிறது,

    நாள் - ஞாயிறு, செவ்வாய் , சனி;

    திதி- துவிதியை, சப்தமி, துவாதசி;

    நட்சத்திரம் - ஆயில்யம், கார்த்திகை, சதயம்,

    ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7,8 ஆகிய பாவகங்கள் முழுவதும் கெட்டு பாவக அதிபதிகளும் , சுக்கிரனும் வலிமையற்று இருந்தால் அந்த ஜாதகம் விஷ கன்னிகா தோஷமுடையதாகும். இந்த தோஷமுடைய ஜாதகருக்கு திருமணம் நடைபெறாது. திருமணம் நடந்தாலும் வெகு நாட்களுக்கு நிலைக்காது. விஷ கன்னிகா தோஷம் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த தோஷம் என்பது மிக அரிதினும் அரிதாக உண்டாகக்கூடிய கிரக அமைப்பாகும்.

    விஷ கன்னிகா தோஷம் என்பது முறையாக இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்து அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது. இது ஒரு முறையல்ல மூன்று நான்கு முறை கூட தொடரும். இறுதியாக வாழ்க்கைத் துணை இல்லாமல் தனியாகத்தான் வாழ வேண்டியது வரும். திருமணத்தையும் தந்து அதில் பலவித பிரச்சினைகளையும் உண்டு பண்ணி, அடுத்தடுத்து திருமணங்களிலும் மன ஒற்றுமை ஏற்படவிடாமல் தடுத்து, மண வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறது விஷ கன்னிகா தோஷம். ஒரே ஆறுதல்...ஒரு குழந்தை பாக்கியமாவது கிடைத்துவிடும். அது மட்டுமே ஆறுதலை தரக்கூடியதாக இருக்கும்.

    இவர்கள் திருமணம் செய்யாமல் இருப்பதே சிறப்பு. 2-வது திருமணமோ வாழ்க்கை இழந்த நபரை திருமணம் செய்யும் போதோ தோஷத்தின் வீரியம் குறையும். எப்படிப்பட்ட திருமண தோஷமாக இருந்தாலும் எந்த விளைவாக இருந்தாலும் தசாபுத்தி கோட்ச்சார கிரகங்கள் தொடர் பெறும் காலங்களில் மட்டுமே சுப-அசுப விளைவுகள் ஏற்படும். ராகு-கேது, செவ்வாய் மட்டுமே திருமணத்தை தடை செய்யும் என்ற பொதுவான மூட நம்பிக்கையை கை கழுவி தடைக்கான காரணத்தை கண்டறிந்து உரிய பரிகாரம் செய்து பயன்பெற வாழ்த்துக்கள்.

    • இந்த சர்ப்ப தோஷத்தால் திருமண தடை ஏற்படுகிறது.
    • இந்த சர்ப்ப தோஷத்தால் திருமண தடை ஏற்படுகிறது.

    முன் ஜென்மங்களில் ஒரு பாம்பை துன்புறுத்தி இருந்தாலோ அல்லது கொன்றிருந்தாலோ கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. முன்ஜென்மத்தில் மட்டுமல்ல தற்போது உள்ள ஜென்மத்திலும் பாம்பை தொந்தரவு செய்தால் இந்த தோஷம் ஏற்படுகிறது. மேலும் 2 பாம்புகள் பின்னி கொண்டிருக்கும் போது அதனை கொல்வது தொந்தரவு செய்வது போன்றவற்றால் மிகுந்த கால சர்ப்ப தோஷம் ஏற்படும்.

    இந்த சர்ப்ப தோஷத்தால் திருமண தடை ஏற்படுகிறது. லக்கினத்தில் ராகு இருந்தால் அதிலிருந்து 7 வைத்து இடத்தில் தான் கேது அமர்வார். ராசிக்கட்டத்தில் 7-வது இடமானது திருமணத்தை குறிக்கும். இதனால் தான் திருமண தடை ஏற்படுகிறது.

    லக்னம் உள்பட அனைத்து கிரகங்களும் ராகு-கேதுவின் பிடியில் அடைபட்ட நிலையில் இருப்பது காலசர்ப்ப தோஷம்.இத்தகைய அமைப்பை பெற்ற ஜாதகருக்கு 33 வயது வரை வாழ்க்கை போராட்ட களமாக இருக்கும்.

    திருமணம், குழந்தை, தொழில் என எல்லா பாக்கியமும் காலம் தாழ்த்தியே ஏற்படும். காலதாமதமாக திருமணம் செய்வதே நல்ல தீர்வு. தசாபுத்திகள் சாதகமாக இருந்தால் திருமணம் தடைபடாது.

    பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். திருமணம் தடைபடுபவர்கள் நாகர்கோவில் ஸ்ரீ நாகராஜா கோவில் சென்று வருவது சிறப்பு.

    கால சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபட சில வழிபாடுகள் உள்ளன. சிவ வழிபாட்டின் மூலம் காலசர்ப்ப தோஷத்தை நீக்கலாம். திங்களன்று சிவா பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் நன்மை கிட்டும்.

    செவ்வாய் கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி மஞ்சள் மற்றும் குங்குமம் சாற்றி வழிபட்டால் தோஷம் விலகும். மீனாட்சி அம்மனை தினமும் தரிசித்து வந்தால் நன்மை கிட்டும்.

    • வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
    • பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு சிக்கிரம் திருமணம் நடக்காது.

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

    பித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

    ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.

    பித்ரு தோஷத்தக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

    ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

    • நாக தோஷத்தால் தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும்.
    • நாகசதுர்த்தி விரதத்தை கணவர், குழந்தைகள் நலனுக்காக பெண்கள் கடைபிடிக்க வேண்டும்.

    ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தி கொண்டாடப்படுகின்றது.

    பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரம் பலிப்பது குறைவு. ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம்7 ஜென்மங்களுக்கும் தொடரும். கடுமையான தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.

    நாக தோஷம் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து திருமணத் தடை ஏற்பட்டுக் கொண்டிருக்கும். சில கணவன் - மனைவி பிரிந்து வாழ்வார்கள் அல்லது குழந்தை பாக்கியம் இருக்காது அல்லது உடல் ஊனமான குழந்தை பிறக்கும். ஒரு சிலருக்கு தீராத நோய், பரம்பரை வியாதி , குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வது போன்ற பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர். நாகசதுர்த்தி விரதத்தை கணவர், குழந்தைகள் நலனுக்காக பெண்கள் கடைபிடிக்க வேண்டும்.

    கடுமையான நாக தோஷம் உள்ளவர்கள் அரசமரமும் வேப்பமரமும் உள்ள இடத்தில் நாகங்களை சிலையாகச் செதுக்கி பிரதிஷ்டைஅபிஷேகம் செய்து பூஜிக்கவேண்டும்.

    மற்றவர்கள் அரசமரத்தடியில் உள்ள சர்ப்ப சிலைக்குநாக சிலைகளுக்கு பால், தண்ணீர்அபிஷேகம் செய்யவேண்டும். பால் ஊற்றி விட்டு தண்ணீர் ஊற்றி சிலையை சுத்தம் செய்ய வேண்டும்.

    அதன் பிறகுநாகர் சிலை மீது மஞ்சளை தலை முதல் வால்முடிய தடவி, சந்தனம், குங்குமத்தினால் அலங்கரித்து, பூமாலைகளை அணிவித்து பஞ்சினால் செய்த கோடிதந்தியம், வஸ்திரம் அணிவித்து,மஞ்சள், சந்தனம், குங்குமம் புஷ்பங்களினால் அலங்கரித்து, பூ அட்சதையுடன் சர்க்கரை பொங்கல், துள்ளு மாவு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு,படைக்க வேண்டும்.

    கற்பூரஆரத்தி காட்டி பூஜை செய்தால் குடும்பத்தில் நிம்மதி பெருகும். அத்துடன் கணவர் மற்றும் குழந்தைகளின் நலன் மேம்படும். தொழில் வளர்ச்சி, நல்ல வேலை வாய்ப்பு சிறப்பாக இருக்கும். கடன் தொல்லை குறையும். ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். விபத்து கண்டம் நீங்கும்.

    நாக தோஷத்தால் தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும்.

    • ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது.
    • நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    நாகம்மன் கோவிலில் நாகசதுர்த்தி அன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. நாகதோஷம் நீங்க பலரும் இங்கு வந்து வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

    நாக வழிபாடு என்பது வேத காலத்திலிருந்தே இருந்துவரும் முக்கியமான வழிபாடு. நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள் `நாக சதுர்த்தி'. சதுர்த்தியன்று விரதம் இருந்து, துள்ளுமாவு படைத்து வேண்டிக்கொண்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம்.

    கருட பஞ்சமிக்கு முன்பு அமையும் சதுர்த்தி திதி நாளே 'நாக சதுர்த்தி' தினமாகும். பொதுவாக, ஆடி மாதம் சதுர்த்தி தினத்தில் தொடங்கும் நாக சதுர்த்தி விரத வழிபாடு அடுத்த வருட ஆனி மாத சதுர்த்தியோடு முடிவடையும். இடைப்பட்ட மாதங்களில் வரும் ஒவ்வொரு சதுர்த்தி தினமும் நாக சதுர்த்தி தினமாகும். அவற்றில் முக்கியமானது சஷ்டி விரதத்தோடு அனுஷ்டிக்கப்படும் ஐப்பசி மாத நாக சதுர்த்தி.

    பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும், ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது. ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாகம் தொடர்ந்து வரும் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.

    நாக சதுர்த்தியின்போது நாகத்தைப் பிரதிஷ்டை செய்து புற்றில் மஞ்சள் பொடி வைத்து நாகத்தை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

    ×