search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளியை"

    • வேலைக்கு வர தாமதம் ஆனதால் மோதல்
    • கத்தியால் குத்திக்கொலை செய்த மில் சூப்பர்வைசர் மார்ட்டினை கைது செய்தனர்.

    கோவை 

    கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பா ளையத்தில் தனியார் மில் செயல்பட்டு வரு கிறது. இந்த மில்லில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் மில் வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.


    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுபாஷ்கும்பார் (வயது 30). இவரது சகோதரர் சுரேந்தர் கும்பார் (28) ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக அந்த மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இரவு இவர்கள் 2 பேரும் இரவு பணிக்கு செல்லவில்லை.

    அவர்கள் வர தாமதம் ஆனதால் மில்லில் சூப்பர்வை சராக வேலை பார்க்கும் கண்ணம்பாளையத்தை சேர்ந்த மார்ட்டின் (36) என்பவர் தொழிலாளர்கள் தங்கி உள்ள குடியிருப்புக்கு சென்றார்.

    அங்கு சுபாஷ்கும்பார், சுரேந்தர்கும்பார் ஆகியோர் பக்கத்து குடியிருப்பில் வசிக்கும் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு இருந்தனர். டி.வி.யில் ஒலியை சத்தமாக வைத்து பார்த்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருந்தது.


    இதனை பார்த்த சூப்பர்வைசர் மார்ட்டின் வேலைக்கு வராமல் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என கேட்டார்.

    மார்ட்டினுக்கும், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சுபாஷ்கும்பார், சுரேந்தர்கும்பார் ஆகியோர் சேர்ந்து சூப்பர்வைசர் மார்ட்டினை தாக்கினர்.

    அப்போது மார்ட்டின் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து சுபாஷ்கும்பார், சுரேந்தர் கும்பார் ஆகியோரின் வயிற்றில் குத்தினார். இதில் 2 பேரும் நிலைகுலைந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சுபாஷ்கும்பார் பரிதாபமாக இறந்தார். சுரேந்தர்கும்பார் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சூலூர் போலீசார் வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த மில் சூப்பர்வைசர் மார்ட்டினை கைது செய்தனர்.  

    ×