search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்சாலை கழிவுகள்"

    • கடந்த வடகிழக்குபருவ மழையின் போது திருவள்ளூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது.
    • நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே முருக்கஞ்சேரி ஊராட்சி பகுதியில் உள்ளது காட்டுத்தாங்கள் ஏரி. இந்த ஏரி சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது.

    கடந்த வடகிழக்குபருவ மழையின் போது திருவள்ளூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது. எனினும் காட்டுத்தாங்கல் ஏரியில் தண்ணீர் தேங்கவில்லை. இதனால் ஏரி தற்போது வறண்டு மணல் மற்றும் முட்புதர்களாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் ஸ்ரீ பெரும்புதூர், இருங்காட்டு கோட்டை மற்றும் அரண்வாயல், போளிவாக்கம், வெள்ளவேடு, திருமழிசை உட்பட பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் தொழிற்சாலை கழிவுகள் இந்த ஏரியில் கொட்டி எரிக்கப்படுகிறது.

    இதனால் இப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறு உட்பட பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இதுகுறித்து சம்பந்தப பட்ட ஊராட்சி நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:-

    பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகளை தினமும் லாரி, லாரியாக கொண்டு வந்து காட்டுத் தாங்கள் ஏரியில் கொட்டி எரித்து வருகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கடந்த சில நாட்கள் பெய்த மழையால் பவுண்டரிகளில் தேக்கி வைக்கப்பட்ட ரசாயனம் கலந்த கருப்பு கழிவுநீர் குளத்தில் தேங்கி வருகிறது.

    அன்னூர்

    கோவை அன்னூர் அடுத்த காரேகவுண்டன் பாளையம் ஊராட்சியில், அச்சம்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது.

    இந்த குளம் நிரம்பினால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். கடந்த சில தினங்களாக அன்னூர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அச்சம்பாளையம் குளத்தில் ஒரளவு தண்ணீர் தேங்கி உள்ளது.

    இந்த நிலையில், அச்சம்பாளையத்தில் உள்ள பவுண்டரிகளில் இருந்து ரசாயனம் கலந்த கருப்பு கழிவுநீர் ரோட்டோர பள்ளங்களில் ஓடி குளத்தில் தேங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    அச்சம்பாளையம் குளம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த குளத்தில் பவானி ஆற்று நீர் நிரப்ப குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் ஆற்றுநீர் இந்த குளத்தில் நிரப்பப்பட உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்கள் பெய்த மழையால் பவுண்டரிகளில் தேக்கி வைக்கப்பட்ட ரசாயனம் கலந்த கருப்பு கழிவுநீர் குளத்தில் தேங்கி வருகிறது.மழைக்காலம் தற்போதுதான் துவங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்ய உள்ளது. இந்த கழிவுநீர் குளத்தில் சேருவது அதிகரித்தால், அத்திக்கடவு திட்டத்தில் குளத்தில் நீர் நிரப்பியும் பயனில்லாமல் போகும். குளத்தில் கழிவு நீர் தேங்கினால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மாசுபடும்.

    மேலும் நெடுஞ்சாலை ஒரத்தில் அமைந்துள்ள நீர் தேக்க தடுப்பணையிலும் இந்த ரசாயனம் கலந்த கழிவுநீர் தேங்கி கழிவுநீர் தொட்டியாக மாறி வருகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களில் மண் மலட்டு தன்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதனை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 10 மாதங்களுக்கு முன்பு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

    பின்னர் அவர்கள் விவசாயிகளிடம் இதற்கான நிரந்தர தீர்வை 3 மாத காலத்திற்குள் முடிவடையும் என்றனர்.ஆனால் ஒரு வருடமாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    அன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில் இதனால் பாதிக்க வாய்ப்புள்ளதால் தமிழக அரசு நேரடியாக நடவடிக்கை எடுத்து தனியார் தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவு நீரை சுத்திகரிக்கும் கழிவு நீராக மாற்றி வெளியே அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×