search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொட்டி பாலம்"

    • தொட்டி பாலத்தின் அருகில் கல்குவாரிகள் அமைக்கக்கூடாது என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
    • தொட்டிப்பாலத்தை பாதுகாக்க போராட்டம் நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

    உசிலம்பட்டி

    தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து வரும் பிரதான கால்வாயில் திண்டுக்கல் மாவட்டம் மேல அச்சணம்பட்டி பகுதியில் தாழ்வான பகுதியை இணைக்க 1,400 கி.மீ., நீளத்தில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரீட் தூண்கள் அதிக பட்ச உயரமாக 68 அடி உயரமும் எழுப்பி தொட்டி ப ாலம் அமைத்துள்ளனர். 20 ஆண்டுகளாக நடந்த பணி நிறைவு பெற்று கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதன் மூலம் உசிலம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் 35 கண்மாய்கள் பாசனம் பெறும். இந்த நிலையில் இந்த பாலத்தின் அருகில் கல் குவாரி, ஜல்லி உடைக்கும் கிரசர் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்குவாரியில் பயன்படுத்தப்படும் வெடியினால் பாலத்தில் விரிசல் ஏற்படுவதாகவும், தூண்கள் சேதமடைவதாகவும், இதனால் கல்குவாரிக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி 58 கிராம பாசன சங்க விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தொட்டி பாலத்தினை அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர், உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ., பி.வி கதிரவன் பார்வையிட்டார்.

    58 கிராம பாசன விவசாயி கள் சங்க நிர்வாகி கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் அ.இ.பார்வர்ட் பிளாக் மாநில நிர்வாகிகள் பாஸ்கர பாண்டியன் ஐ.ராஜா மாவட்ட தலைவர் ஆதிசேடன் மாவட்ட கவுன்சிலர் ரெட் காசிமாயன் ஆச்சி ராஜா சபரி விவசாய அணி எவரெஸ்ட் பால்சாமி ஆகியோர் கலந்து கொண்ட னர்.பாலத்தின் இணைப்பு பகுதிகளில் வெடி வைப்பதால் ஏற்படும் விரிசல், பாலத்தின் தூண்களின் இடையே கனரக வாகனங்கள் செல்வதால் தூண்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் உடனடியாக மதுரை, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் இந்த குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

    இல்லையென்றால் இந்த தொட்டிப்பாலத்தை பாதுகாக்க போராட்டம் நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

    ×