search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்குவாரிகள்"

    • 158 கல்குவாரிகள் வேலை நிறுத்தம்; 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • கட்டுமான தொழிலாளர்கள் ஆகியோரை திரட்டி சாலை மறி யலில் ஈடுபடுவோம் என்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 158 கல், கிராவல் மண் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்ற னர். இந்த நிலையில் குவாரிகளுக்கு அனுமதி சீட்டு வழங்குவதில் மாவட்ட கனிம வளத்துறை இயக்குநர் தங்கமுனியசாமி தாமதம் செய்வதாக கூறி கடந்த 4-ந் தேதி முதல் 158 கல்குவாரி கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. தொடர் வேலை நிறுத் தத்தால் தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மண், கற்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள் ளதால் மாவட்டத்தில் கட்டுமான பணிகளும் பாதி யிலேயே நிறுத்தப் பட்டு உள்ளது. இதுகுறித்து குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் நாராயண பெருமாள் கூறுகையில், குவாரிகளுக்கு அனுமதி சீட்டு வழங்குவது தொடர்பாக கடந்த 10 நாட்களாக பிரச்சினை உள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள் ளோம்.

    மாவட்ட நிர்வாகம் தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் லாரி உரிமை யாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் ஆகி யோரை திரட்டி சாலை மறி யலில் ஈடுபடுவோம் என்றார்.

    • தொட்டி பாலத்தின் அருகில் கல்குவாரிகள் அமைக்கக்கூடாது என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
    • தொட்டிப்பாலத்தை பாதுகாக்க போராட்டம் நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

    உசிலம்பட்டி

    தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து வரும் பிரதான கால்வாயில் திண்டுக்கல் மாவட்டம் மேல அச்சணம்பட்டி பகுதியில் தாழ்வான பகுதியை இணைக்க 1,400 கி.மீ., நீளத்தில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரீட் தூண்கள் அதிக பட்ச உயரமாக 68 அடி உயரமும் எழுப்பி தொட்டி ப ாலம் அமைத்துள்ளனர். 20 ஆண்டுகளாக நடந்த பணி நிறைவு பெற்று கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதன் மூலம் உசிலம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் 35 கண்மாய்கள் பாசனம் பெறும். இந்த நிலையில் இந்த பாலத்தின் அருகில் கல் குவாரி, ஜல்லி உடைக்கும் கிரசர் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்குவாரியில் பயன்படுத்தப்படும் வெடியினால் பாலத்தில் விரிசல் ஏற்படுவதாகவும், தூண்கள் சேதமடைவதாகவும், இதனால் கல்குவாரிக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி 58 கிராம பாசன சங்க விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தொட்டி பாலத்தினை அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர், உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ., பி.வி கதிரவன் பார்வையிட்டார்.

    58 கிராம பாசன விவசாயி கள் சங்க நிர்வாகி கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் அ.இ.பார்வர்ட் பிளாக் மாநில நிர்வாகிகள் பாஸ்கர பாண்டியன் ஐ.ராஜா மாவட்ட தலைவர் ஆதிசேடன் மாவட்ட கவுன்சிலர் ரெட் காசிமாயன் ஆச்சி ராஜா சபரி விவசாய அணி எவரெஸ்ட் பால்சாமி ஆகியோர் கலந்து கொண்ட னர்.பாலத்தின் இணைப்பு பகுதிகளில் வெடி வைப்பதால் ஏற்படும் விரிசல், பாலத்தின் தூண்களின் இடையே கனரக வாகனங்கள் செல்வதால் தூண்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் உடனடியாக மதுரை, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் இந்த குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

    இல்லையென்றால் இந்த தொட்டிப்பாலத்தை பாதுகாக்க போராட்டம் நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

    • சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரி, மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகிறது.
    • சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரி, மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கல்குவாரி தொழிலுக்கு உரிய முறையில் அனுமதி வழங்கவும், லைசன்ஸ் வழிமுறைகளை எளிதாக்கவும், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்கவும் வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஜூன்.26 ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரிகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 9 நாட்களாக பல்லடம் பகுதியில் பல கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரிகள் இயங்கவில்லை. பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் ஒரே இடத்தில் 700 க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தால் சுமார் ரூ.1600 கோடி அளவிற்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக கல்குவாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து பல்லடத்தில் கல்குவாரிக ள் கிரசர்கள் வழக்கம் போல் இயங்க தொடங்கின.

    • ஒரு குவாரி உரிமம் பெற்றும் இன்னும் தொடங்கப்படாததால் அதில் எந்தவிதமான விதிமீறல்களும் இல்லை.
    • 41 கல்குவாரிகளுக்கு சுமார் ரூ.300 கோடி வரை அபராதம் விதித்து கனிமவள துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள 55 குவாரிகளையும் முழுமையாக ஆய்வு செய்து விதிமீறல்களை கண்டறியுமாறு கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சிறப்பு குழுக்கள் ஆய்வு செய்து அறிக்கையை கலெக்டரிடம் சமர்பித்தது.

    அதன்படி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 55 கல் குவாரிகளில் 54 கல்குவாரிகளில் விதி மீறல்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஒரு குவாரி உரிமம் பெற்றும் இன்னும் தொடங்கப்படாததால் அதில் எந்தவிதமான விதிமீறல்களும் இல்லை.

    இதில் 13 கல்குவாரிகளுக்கு ஏன் கல்குவாரிகளை மூடக்கூடாது என விளக்கம் கேட்டு கலெக்டர் விஷ்ணு தரப்பில் இருந்து குவாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    மேலும் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிம வளங்களை வெட்டி எடுத்ததாக 41 கல்குவாரிகளுக்கு சுமார் ரூ.300 கோடி வரை அபராதம் விதித்து கனிமவள துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    அந்த அபராத தொகையை வசூலிக்க அந்தந்த சரக சப்-கலெக்டர்களுக்கு கனிமவளத்துறை பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அனுமதி அளிக்கப்பட்டு செயல்பட்டு வந்த அனைத்து குவாரிகளிலும் விதி மீறல்கள் நடந்ததுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் அபராதம் விதிக்கப்பட்ட குவாரிகள் அபராத தொகையை கனிம வளத்துறையில் செலுத்தினால் மீண்டும் குவாரிகள் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தற்போது விதிமுறைகள் மீறப்பட்ட குவாரிகளில் பெரும்பாலானவை அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×