search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோடும் வீதி"

    • ரூ.53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
    • சாலை சீரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலையில் அடையாளமாக விளங்கி வரும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடங்கியுள்ளது. விழாவின் சிறப்பம்சமான தேரோட்டம் வரும் 13-ந்தேதி நடைபெறவுள்ளது. தேரோட்டத்துக்கென ரூ.53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேரின் வெள்ளோட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. 5 நிலைகளை கொண்ட புதிய தேர் உடுமலை நகர வீதிகளில் உலா வரும் கண்கொள்ளாக் காட்சியைக் காண பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    இந்தநிலையில் தேரோடும் வீதிகளில் சாலைப்பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் நகராட்சி சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சதாசிவம் வீதி, வடக்கு குட்டை வீதி, நெல்லுக்கடை வீதி உள்ளிட்ட தேரோடும் வீதிகளில் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் சாலை ஓரங்களில் மழை நீர் வடிகால் கட்டும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் அவற்றுக்கு கான்கிரீட் மூடி அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொள்ளாச்சி சாலையில் சாலை நடுவில் மையத்தடுப்புகளில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பங்களும் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் தேர்திருவிழாவில் தேரோட்டத்தை சிறப்பாக நடத்தும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ×