search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய அஞ்சல் வாரம்"

    • தேசிய அஞ்சல் வாரத்தையொட்டி 13-ந் தேதி நடைபெறுகிறது.
    • “நம்பிக்கைக்காக ஒன்றுபடுவோம்” என்ற தலைப்பில் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது.

    கோவை,

    தேசிய அஞ்சல் வாரம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 9-ந் தேதி முதல் ஒரு வாரத்திற்கு அஞ்சல் துறையினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. யுனிவர்சல் போஸ்டல் யூனியன் (உலகளாவிய தபால் ஒன்றியம்) 1874-ம் ஆண்டு தொடங்கப்பட்டதன் நினைவாக இந்த அஞ்சல் வார கொண்டாட்டம் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது.

    மக்களிடையே அஞ்சல் துறை பற்றியும், அதனுடைய திட்டங்களை பற்றியும் பொதுமக்களுக்கு அஞ்சல் துறையினர் செய்து வரும் சேவைகள் பற்றியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை இந்த ஒரு வாரத்தில் நடத்த அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.

    இந்த ஆண்டு "நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்திய அஞ்சல் துறையினரின் பங்கு" என்பதனை குறிக்கும் வகையில் "நம்பிக்கைக்காக ஒன்றுபடுவோம்" என்ற தலைப்பில் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது.

    அதன்படி, இன்று (9-ந் தேதி) உலக தபால் தினமும், 10-ந் தேதி வலுவூட்டல் தினமாகவும், 11-ந் தேதி தபால் தலை சேகரிப்பு தினமாகவும், 12-ந் தேதி தபால்கள் மற்றும் பார்சல் தினமாகவும் கடைசி நாளான 13-ந் தேதி சாமானியர் நல்வாழ்வு தினமாகவும் அனுசரிப்பது என அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. இதன் தொடக்கமாக இன்று காலை 10.30 மணியளவில் கோவை தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் வார கொண்டாட்டத்தின் தொடக்க விழா நடக்கிறது. இதனை கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கோபாலன், ஆர்.எம்.எஸ். கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அகில் நாயர் தொடங்கி வைக்கின்றனர்.

    விழா ஏற்பாடுகள் மற்றும் ஒருவார நிகழ்ச்சிகள் அனைத்தையும் கோவை தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அதிகாரி ஜெயராஜ் பாபு ஏற்பாடு செய்துள்ளார். ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும், பள்ளி குழந்தைகள் அஞ்சலகத்தின் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சிகளும், அஞ்சல் ஊழியர்களுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    முக்கிய நிகழ்வாக, பள்ளி குழந்தைகள் தங்களது 5-ம் வயதிலும், 15-ம் வயதிலும் ஆதார் அட்டை யில் உள்ள கைரேகை, புகைப்படம் மற்றும் கண் கருவிழி, ஆகியவற்றை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இதற்கு உதவி யாக 13-ந் தேதி சிறப்பு ஆதார் கவுண்டர் பள்ளி குழந்தைகளுக்காக கோவை தலைமை அஞ்சலகத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த ஆதார் கவுண்டர் பள்ளிக்கு சென்றுவிட்டு வரும் குழந்தைகள் தங்களது ஆதார் சேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் விதமாக மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கோவை முதுநிலை அஞ்சல் அதிகாரி ஜெயராஜ் பாபு தெரிவித்துள்ளார்.

    ×