search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துவையல்"

    • வெற்றிலையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.
    • இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    வெற்றிலை - 10

    காய்ந்த மிளகாய் - 4

    வெங்காயம் - ஒன்று

    தேங்காய் துருவல் - சிறிதளவு

    பூண்டுப் பல் - 3

    புளி - கோலிக்குண்டு அளவு

    உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    வெற்றிலைத் துவையல்

    வெற்றிலைத் துவையல்

    செய்முறை:

    வெற்றிலையில் காம்பு, நடு நரம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும்.

    அதனுடன் காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, தேங்காய் துருவல், வெற்றிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் புளி, உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.

    ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்த துவையலாக அரைத்து எடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான வெற்றிலைத் துவையல் ரெடி.

    • எல்லோருக்கும் ஹோட்டல் சட்னி மிகவும் பிடிக்கும்.
    • இன்று இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    தேங்காய் - 1 கப் (துருவியது)

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி - 1 சிறிய துண்டு

    சீரகம் - ஒரு சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு

    கடுகு - 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் அரைத்த சட்னியை ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

    பிறகு அதை சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்.

    • பிரண்டைத் துவையலை வாரத்திற்கு இரண்டு நாளாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    • பிரண்டைத் துவையலை 4 நாட்கள் வரை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிரண்டை - 1 கட்டு

    உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

    பூண்டு - 10 பல்

    இஞ்சி - 1 துண்டு

    காய்ந்த மிளகாய் - 5 முதல் 6

    தேங்காய் - 1 துண்டு

    புளி - சிறிதளவு

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    பெருங்காயத்தூள் - கால் டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    பிரண்டையில் உள்ள மேல் தோலை நீக்கி விட்டு நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    தேங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்துக் எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் பூண்டு, இஞ்சி, புளி, பெருங்காயத்தூள், தேங்காய் என ஒவ்வொன்றாக வறுத்து ஆற வைக்கவும்.

    அடுத்து அதில் பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை சேர்த்து வதக்கவும். பிரண்டையை நன்கு வதக்க வேண்டும். பிரண்டையை வதக்கும் போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

    சூடு ஆறிய பின் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். சுவையான சத்தான பிரண்டை துவையல் தயார்.

    • வாயு தொல்லை இருப்பவர்கள் இந்த துவையல் சாப்பிடலாம்.
    • இந்த துவையலை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள் :

    பெரிய நெல்லிக்காய் - 4,

    மாங்காய் இஞ்சி - 50 கிராம்,

    கொத்துமல்லித் தழை - கைப்பிடி,

    பச்சை மிளகாய் - 2,

    புளி - சிறு அளவு,

    துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்.

    செய்முறை:

    மாங்காய் இஞ்சியைத் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கவும்.

    நெல்லிக்காயையும் கொட்டை நீக்கி, நறுக்கிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இஞ்சி, நெல்லிக்காயுடன் மற்ற பொருட்களையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, ஆறவைத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.

    சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், பிரெட், தோசையின் மேலே தடவி சாப்பிட சுவையாக இருக்கும்.

    குறிப்பு: இந்தத் துவையலை சாதத்தில் கலந்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, ஒரு துளி நெய்விட்டுக் கலந்தால், சுவையான 'மாங்காய் இஞ்சி - நெல்லிக்காய் சாதம்' தயார்.

    ×