search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரோணர்"

    தவ வலிமை மிகுந்த பரத்வாஜர் - கிருதசி தம்பதியரின் மகனான துரோணர் பரசுராமரிடம் சென்று போர் தந்திரங்களைக் கற்றார். மகாபாரத போரில் கவுரவர்களின் பக்கம் நின்று பாண்டவர்களின் படையை எதிர்த்தார்.
    தவ வலிமை மிகுந்த பரத்வாஜர்- கிருதசி தம்பதியரின் மகன் துரோணர். பரம ஏழையாக இருந்த துரோணரால் தன் மகன் அசுவத்தாமனுக்கு பசும்பால் கூட கொடுக்க முடியவில்லை. தன்னோடு குருகுலத்தில் பயின்ற சத்ரியனான துருபதனிடம் சென்று, நட்பின் அடிப்படையில் பசு ஒன்றை தரும்படி துரோணர் கேட்டார். ஆனால் துருபதன், அவரை அவமதித்து அனுப்பினான்.

    இதையடுத்து துரோணர், பரசுராமரிடம் சென்று போர் தந்திரங்களைக் கற்றார். தன்னுடைய போர் முறையை சத்ரியர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று பரசுராமர் பெற்ற வாக்குறுதியை மறந்து, அஸ்தினாபுரத்தில் பாண்டவர்களும், கவுரவர்களுக்கும் குருவாக இருந்து போர் தந்திரங்களை கற்றுக் கொடுத்தார் துரோணர். மகாபாரத போரில் கவுரவர்களின் பக்கம் நின்று பாண்டவர்களின் படையை எதிர்த்தார்.

    இவர் பாண்டவர்கள், கவுரவர்களின் குரு. கண்ணுக்குப் புலப்படாத போர் வீரர். குருஷேத்ர யுத்தத்தில் கவுரவர்களுக்காக போரிட்ட இவர் பாண்டவர் படையில் ஆயிரம் வீரர்களை கொன்று குவித்தார். போரில் தன் மகன் அசுவத்தாமன் கொல்லப்பட்டதாக கிடைத்த தகவலால் மனம் நொறுங்கிய துரோணர் ஆயுதங்களை வீசி எறிந்தார். அப்போது திரவுபதியின் சகோதரர் திருஷ்டத்துயும்னன், துரோணரை கொன்றான்.
    ×