search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்மானம் நிறைவேற்றம்"

    • மாதாந்திர சாதாரண கூட்டம் நடந்தது
    • பள்ளி மேல் கூரையை இடித்து புதியதாக கட்ட வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு நாட்டறம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனுசாமி தலைமை தாங்கினார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரகுகுமார், சித்ராகலா, துணைத் தலைவர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    சாதாரண கூட்டத்தில் புல்லூர் ஊராட்சியில் காந்தி நகர் மேல் நீர் தேக்க தொட்டி முதல் திருப்பதி வட்டம் வரை புதிய பைப் லைன் அமைத்தல், மேலும் நாட்டறம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கராபுரம் வடக்குப்பட்டு, தும்பேரி, புல்லூர் தகரகுப்பம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடம் மற்றும் மேற்கூரை இடித்து புதிதாக கட்டப்படுகிறது உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஒன்றிக்குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் கருணாநிதி (பொறுப்பு) நன்றி கூறினார்.

    • துறையூர் நகராட்சி கூட்டத்தில் குடிநீர், சாலைப்பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் 69 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • 24 வார்டுகளிலும் குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்து உள்ளதால் அதனை மாற்றி அமைப்பது தொடர்பாக வார்டு வாரியாக தலா 3 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் கோர முடிவு

    திருச்சி:

    துறையூர் நகராட்சியின் சாதாரண நகர்மன்றக் கூட்டம் தலைவர் செல்வராணி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர செயலாளரும், நகர்மன்றத் துணைத் தலைவருமான மெடிக்கல் முரளி, நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார், நகராட்சி மேலாளர் முருகராஜ், நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்து உள்ளதால் அதனை மாற்றி அமைப்பது தொடர்பாக வார்டு வாரியாக தலா 3 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் கோருவது,

    நகர்மன்ற தலைவருக்கு புதிய வாகனம் வாங்குவது, நகராட்சிக்கு சொந்தமான பள்ளி கட்டடங்களை சீரமைத்து ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பது உள்ளிட்ட 69 தீர்மானங்கள் மன்றத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.

    பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான நகர்மன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் சுதாகர், கார்த்திகேயன், சுமதி மதியழகன், பாலமுருகவேல், சரோஜா இளங்கோவன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×