நாட்டறம்பள்ளி ஒன்றிய கூட்டத்தில் 24 தீர்மானம் நிறைவேற்றம்

மாதாந்திர சாதாரண கூட்டம் நடந்ததுபள்ளி மேல் கூரையை இடித்து புதியதாக கட்ட வலியுறுத்தல்
நாட்டறம்பள்ளி ஒன்றிய கூட்டத்தில் 24 தீர்மானம் நிறைவேற்றம்
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு நாட்டறம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனுசாமி தலைமை தாங்கினார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரகுகுமார், சித்ராகலா, துணைத் தலைவர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

சாதாரண கூட்டத்தில் புல்லூர் ஊராட்சியில் காந்தி நகர் மேல் நீர் தேக்க தொட்டி முதல் திருப்பதி வட்டம் வரை புதிய பைப் லைன் அமைத்தல், மேலும் நாட்டறம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கராபுரம் வடக்குப்பட்டு, தும்பேரி, புல்லூர் தகரகுப்பம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடம் மற்றும் மேற்கூரை இடித்து புதிதாக கட்டப்படுகிறது உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிக்குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் கருணாநிதி (பொறுப்பு) நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com