search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிழாப்"

    • சேலம் மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் மட்டுமல்லாமல் விளையாட்டு, கலை உள்ளிட்ட பிற திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி, வட்டாரம் அளவில் கலைத்திருவிழாக்கள் நடத்தப்பட்டன.
    • கடந்த மாதம் 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும், வட்டார அளவில் 29-ந்தேதி முதல் 5-ந்தேதி வரையிலும் நடத்தி முடிக்கப்பட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகளை மரவனேரி தனியார் பள்ளியில் இன்று தொடங்கியது.

    மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் மட்டுமல்லாமல் விளையாட்டு, கலை உள்ளிட்ட பிற திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி, வட்டாரம் அளவில் கலைத்திருவிழாக்கள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழாக்களை நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.

    சேலம் மாவட்டத்தில் கலைத் திருவிழா போட்டிகள் அனைத்து வகை அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சுப் போட்டி, இசைக் கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்பித்தல், புகைப்படம் எடுத்தல், பல குரல் பேச்சு, விவாத மேடை, பட்டிமன்றம் உள்ளிட்ட பல போட்டிகள் பள்ளி அளவில் கடந்த மாதம் 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும், வட்டார அளவில் 29-ந்தேதி முதல் 5-ந்தேதி வரையிலும் நடத்தி முடிக்கப்பட்டன.

    தற்போது வட்டார அளவில் வெற்றி பெற்று முதல் 2 இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று முதல் 10-ந்தேதி வரை 4 நாட்கள் புனிதபால் மேல்நிலைப்பள்ளி, பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சக்தி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மணக்காடு நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிறுமலர் துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. மாவட்ட அளவில் நடைபெறும் இக்கலைத் திருவிழாவில் 207 வகையான போட்டிகளில் 15,365 மாணவ, மாணவியர்கள் பங்கேற்கின்றனர்.

    மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் அவர்கள், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் இன்று தொடங்கி வைத்தார்கள். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது. மேலும் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

    தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், சேலம் மாநகராட்சி 29-வது வார்டு கவுன்சிலர் கிரிஜா குமரேசன் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.         

    ×