search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிழா கொண்டாட்டம்"

    • ஈரோடு மாவட்டத்திலும் இன்று 37 தியேட்டர்களில் அஜித்-விஜய் நடித்த துணிவு-வாரிசு படம் இன்று அதிகாலை ரிலீஸ் ஆனது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் , அஜித். 2 பேருக்கும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

    இவர்கள் நடித்த படம் ரிலீஸ் ஆகும் போது தியேட்டர்களில் ரசிகர்கள் விழாக்கோலம் பூண்டு படத்தை வரவேற்பார்கள்.

    இந்நிலையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்-அஜித் நடித்த வாரிசு, துணிவு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. இதனால் தியேட்டர்களில் இன்று ரசிகர்கள் அதிகாலை முதல் குவிந்தனர்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் இன்று அஜித்-விஜய் நடித்த துணிவு-வாரிசு படம் இன்று அதிகாலை ரிலீஸ் ஆனது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 37 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனது. ஈரோடு மாநகர பகுதியில் 11 தியேட்டர்களும் இதில் அடங்கும்.

    அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் தீ பிடிக்கக்கூடிய வெடி பொருட்கள் எதையும் எடுத்து வரக்கூ டாது. குடிபோதையில் திரைப் படம் பார்க்க வரக்கூடாது. மேடையில் ஏறி ஆடக்கூடாது.

    நாற்காலி மற்றும் திரை துணி ஆகியவை சேதம் ஏற்பட்டால் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பொறுப்பு ஏற்க வேண்டும். அவர்களே உரிய இழப்பீடு தர வேண்டும். பொதுமக்கள் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது.

    திரைப்படம் பார்க்க வரும் பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது. ரசிகர் மன்ற காட்சி திரையிடும் போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் பொறுப்பு. ட்ரம் செட், பேண்ட் ஆகியவை கொண்டு வரக்கூடாது என பல கட்டுப்பாடுகளை போலீசார் விதித்திருந்தனர்.

    ஈரோட்டில் இன்று அதிகாலை 5 மணி அளவில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. இதனால் இன்று அதிகாலை முதலே தியேட்டர் முன்பு ரசிகர்கள் குவிய தொடங்கினார்கள்.

    விஜய், அஜித் படங்களை கையில் வைத்துக்கொண்டு நடனமாடி உற்சாகமாக வரவேற்றனர்.

    மேலும் பட்டாசு வெடித்தும் வரவேற்றனர். சில ரசிகர்கள் அஜித் -விஜய் பட டீ சர்ட் அணிந்து வந்திருந்தனர். சில ரசிகர்கள் உற்சாகமாக கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்-அஜித் படங்கள் ஒன்றாக தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளதால் தியேட்ட ர்களில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    ×