search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம்"

    • திருப்பத்தூர் மாவட்டம் பல வரலாற்று சிறப்புகளை கொண்டது சோழ விஜயநகர மன்னர்கள் ஆண்ட பகுதி இது.
    • இங்குள்ள மக்களை சந்தித்தேன். அவர்கள் உடல் எப்படி இருக்கிறது என கேட்டார்கள்.

    திருப்பத்தூர் புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டம் பல வரலாற்று சிறப்புகளை கொண்டது சோழ விஜயநகர மன்னர்கள் ஆண்ட பகுதி இது. புகழ்பெற்ற பல ஊர்கள் இருந்ததால் திருபற்று ஊர் என்று அழைக்கப்பட்டு பின்னர் திருப்பத்தூராக மருவியது.

    ஏலகிரி ஜவ்வாது மலைத் தொடர்கள் கொண்ட இந்த பகுதியில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். ஏலகிரி மலையில் இருந்து வரும் ஆற்றிலிருந்து ஜலகாம்பாறை அருவி உருவெடுத்து கொட்டுகிறது.

    இந்த நிகழ்ச்சி மூலம் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் தற்போது திருப்புத்தூர் என்று சொல்லக் கூடிய வகையிலே இந்த ஊர் மாறி இருக்கிறது.

    கடந்த வாரம் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அது முழுமையாக குணமடையாத காரணத்யதால் டாக்டர்கள் என்னை ஓய்வெடுக்க உத்தரவிட்டனர்.

    அதனால் குறிப்பிட்ட தேதியில் வர முடியவில்லை.

    இப்போது உங்களைப் பார்த்தவுடன் உற்சாகம் அடைந்துள்ளேன் .மருந்து மாத்திரையை விட மக்களை சந்திப்பது தான் எனக்கு உற்சாகம் வருகிறது.

    உடல் சோர்வு நீங்கி புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

    இங்குள்ள மக்களை சந்தித்தேன். அவர்கள் உடல் எப்படி இருக்கிறது என கேட்டார்கள். நான் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். ஆட்சி எப்படி உள்ளது ஏதாவது குறை உள்ளதா என கேட்டேன். குறைகள் இருக்கட்டும் முதலில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். ஓய்வெடுங்கள் எனக் கூறினார்கள்.

    அவர்களின் சிரிப்பை பார்த்தேன் ஏழையின் சிரிப்பில் தான் இறைவனை நம்மாளும் பார்க்க முடிகிறது.

    இன்று புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளேன் .நலத்திட்ட உதவிகள் மூலம் 16,820 குடும்பங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மக்களை தேடி தேடி உதவி செய்யும் ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி.

    புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளேன். குறித்த காலத்திற்குள் இதனை கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடியில் புதிய வருவாய் கோட்ட அலுவலகம் ஆதியூர் சமுதாய நலக்கூடம் சோலூர் கல்லூரி விடுதி மற்றும் 16 சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    வாணியம்பாடி தொழிற் பயிசி நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டுப்பட்டுள்ளது.

    கடந்த ஆட்சியில் ஒரு திட்டத்திற்கு ஒரு விழா நடத்துவார்கள்.

    தி.மு.க ஆட்சியில் பல திட்டங்களுக்கு ஒரே விழாவாக நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.கடந்த ஆட்சியை போல விழா எடுத்தால் 365 நாட்கள் விழா எடுக்க வேண்டியிருக்கும். அந்த அளவிற்கு திட்டங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் ஆயிரத்து 73 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. 2218 மனுக்கள் பெறப்பட்டு 1741 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 82 லட்சம் பெண்கள் இலவசமாக பஸ்ஸில் பயணம் செய்துள்ளனர். 2052 பேர் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 196 பேர் காக்கப்பட்டுள்ளது.கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் 10 ஆயிரத்து 963 பேர் பயனடைந்துள்ளனர். 3 லட்சத்து 13 ஆயிரம் ரூ.4 ஆயிரம் நிதி பெற்றுள்ளனர்.

    3 லட்சத்து 12 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து 22 ஆயிரம் குடும்பத்தினருக்கு 22 வகையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 25 லட்சத்து 52 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 11 ஆயிரத்து 978 பேருக்கு காப்பீடு உதவி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பெண்கள் முதியோர் உதவித்தொகை என ரூ 20 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது.

    ஒரு லட்சத்து 80 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன 70 ஆயிரம் பேருக்கு தோட்டக்கலை பயிர்கள் வழங்கப்பட்டுள்ளது. 4 கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 850 பேர் பயனடைந்துள்ளனர் 861 புலவர்களுக்கு மின் இணைப்பு தரப்பட்டுள்ளது.

    விஷமங்கலம் வட பூங்குளம் வடவள்ளி ஆகிய இடங்களில் பாம்பாற்றின் குறுக்கே புதிதாக பாலங்கள் கட்டப்படும் செல் குரும்பை பகுதியில் காற்று பாலம் அமைக்கப்படும் ஏலகிரி மலையில் ஓர் சுற்றுலாத் தலமாக இரண்டு கோடியே 98 லட்சம் பில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆண்டு அணையில் படகு குழாம் மற்றும் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது. சில வசதிகளை மேம்படுத்த திட்ட மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி வழங்கப்படும். ஆம்பூர் அருகே உள்ள ஓட்டல் சரஸ்வதி கோவில் சுனைநீர் மேம்படுத்த திட்டங்கள் பிரசித்தி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி வழங்கப்படும். ஏலகிரி மலையில் சுகாதார கூடுதல் படுக்கை வசதி மருத்துவ வசதிகளுடன் மேம்படுத்தப்படும். நாட்றம்பள்ளி புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.

    எந்த காலகட்டத்திலும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இந்திய சுதந்திரத்திற்கு போராட்டத்திற்கு வழிகாட்டியது தமிழகம் தான் அதுவும் வேலூரில் நடந்த சிப்பாய் புரட்சி தான் முன்னோடியாக அமைந்தது. தற்போது இந்தியா முழுவதும் சமூக நீதி ஒலிக்கிறது மாநில சுயாட்சி குரல் ஒலிக்கிறது பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர மற்ற மாநில முதலமைச்சர்கள் மாநில சுயாட்சிக்காக குரல் கொடுக்கிறார்கள்.

    இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு உறுதிப்பட்ட உறுதிப்படுத்தியதற்கு காரணம். திமுக தான் காரணம் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். அரசியல் நெறிமுறைகள் மட்டுமின்றி ஆட்சி நெறிமுறைகளும் இந்தியாவிற்கு முன்னதாக திமுக திகழ்கிறது மாநில சுயாட்சி மக்களுக்கான திட்டங்கள் செயல்பாடு பெண்கள் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் வழிகாட்டியாக திமுக அரசு உள்ளது.

    1607 ஆம் ஆண்டு அண்ணா முதலமைச்சர் ஆனார் அவர் மூன்று முத்தான திட்டங்களை நமக்கு தந்தார். ஆனால் இரண்டரை ஆண்டுகளில் அவர் நம்மை விட்டு பிரிந்து விட்டார். பின்னர் கருணாநிதி திட்டங்களால் உருவானதுதான் இந்த நவீன தமிழகம் இந்த தமிழகம் கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள திட்டங்கள் இந்தியாவிற்கு அவசியமானதாகும் முக்கியமானதாகும் அமைந்துள்ளது அனைத்து மாநிலங்களும் வளரவேண்டும் நான் மாவட்டந்தோறும் திட்டங்களை அறிவித்து வருகிறேன். அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சி முக்கியம் இதோடு நம் கடமை முடிந்து விடவில்லை தனிமனித தேவையை நிறைவேற்ற வேண்டும் அதற்காக நேரில் மனுக்களை பெற்று தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறேன் இதுதான் திராவிட ஆட்சி இந்த இயக்கம் இதில் இம்மியளவும் மாறாமல் ஆட்சி வீறுநடை போடும் உங்கள் குடும்பம் நன்றாக நலம் பெற வேண்டும் என்றால் பிள்ளைகளை நன்றாக படிக்க வேண்டும் அவர்கள் வேலையை தேடி தவிப்பதை தடுக்க நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது இளைஞர்கள் மத்தியில் இந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு வருகிறது.

    தமிழக மக்கள் வளர்ச்சிக்காக எனது உடல் சோர்வை பற்றி கவலைப்படாமல் என் சக்தியை மீறி உழைத்து வருகிறேன். அமைச்சர்களும் அதிகாரிகளும் அவ்வாறு தான் செயல்பட்டு வருகிறார்கள். இந்த திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி இந்த பொற்கால ஆட்சியை தொடர்வோம். இதனை இந்தியாவிற்கே முன்னோடி ஆட்சியாக மலர செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றினார்.
    • பின்னர் கலெக்டர் அறையில் அமர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மைதானத்திற்கு முதல்-அமைச்சர் சென்றார்.

    திருப்பத்தூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று முதல் 2 நாட்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    இதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து கார் மூலம் ஆம்பூர் வந்து தங்கினார்.

    திருப்பத்தூரில் ரூ.110 கோடியில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலையில் ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி, ஜோலார்பேட்டை வழியாக காரில் திருப்பத்தூருக்கு புறப்பட்டு சென்றார்.

    வழி நெடுகிலும் அவருக்கு திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கலெக்டர் அமர் குஷ்வாஹா தி.மு.க நிர்வாகிகள் புத்தகங்கள், சால்வை ஆகியவற்றை வழங்கி மு.க ஸ்டாலினை வரவேற்றனர்.

    பின்னர் புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் கலெக்டர் அறையில் அமர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மைதானத்திற்கு முதல்-அமைச்சர் சென்றார்.

    அங்கு பல்வேறு துறைகளின் சார்பில் 16,820 பயனாளிகளுக்கு ரூ.103 கோடியே 42 லட்சத்து 51,541 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கலெக்டர் அமர்குஷ்வாஹா, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருப்பத்தூர் நகரமே இன்று காலை விழா கோலம் பூண்டிருந்தது.

    திருப்பத்தூரில் நடைபெற்ற விழா நிறைவடைந்ததும் அங்கிருந்து காரில் வேலூருக்கு முதலமைச்சர் புறப்பட்டு வந்தார்.ரூ.54 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள வேலூர் புதிய பஸ் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை 4.30 மணிக்கு வேலூர் கோட்டை மைதானத்தில் அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்கிறார். விழாவில் வேலூர் மாவட்டத்தில் ரூ.62 கோடியே 10 லட்சத்தில் முடிவற்ற 17 திட்ட பணிகளை திறந்து வைத்தும், ரூ.32 கோடியே 89 லட்சம் மதிப்பில் 50 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

    பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 30,423 பயனாளிகளுக்கு ரூ.360 கோடியே 53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    விழாவில் நலத்திட்ட உதவிகள் பெரும் பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழா தொடங்கும் முன்பாக உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதில் அவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றால் மட்டுமே முதலமைச்சரிடம் இருந்து நலத்திட்ட உதவிகள் பெற அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகள் விழாவில் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்தில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    விழா நிறைவடைந்ததும் முதல்மைச்சர் மு. க.ஸ்டாலின் ராணிப்பேட்டை செல்கிறார். அங்கு தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    ×