search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி கலெக்டர் ராசாமணி"

    நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கலெக்டர் ராசாமணி உத்தரவிட்டார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பாக காவல்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறை அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் ராசாமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ராசாமணி கூறியதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி களிலும் சாலை பாதுகாப்பு அமைப்பு தொடங்க வேண்டும். மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கோர்ட்டு உத்தரவுப்படி உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், நீர் நிலை புறம்போக்கில் செங்கல்சூளை, விவசாயம் போன்ற பணிகள் செய்யப்பட்டு இருந்தாலும் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். 

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள காவிரி நீரை ஏரி, குளங்களில் நிரப்புவதற்கு முழுவீச்சில் செயல்பட வேண்டும். ஏரி, குளங்களில் நீர் நிரப்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாய பயன்பாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், போலீஸ் துணை கமி‌ஷனர்கள் நிஷா, மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) சங்கரநாராயணன், துணை கலெக்டர் கமல்கிஷோர் உள்பட மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×