search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தினவிழா"

    • சிறப்பான முறையில் பணியாற்றிய ஊர்க்காவல் படையினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
    • 24 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணகிரி படைத்தளபதி வெங்கடேசனுக்கு பணி நிறைவு விழா நடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி, சென்னை சாலையில் உள்ள தேவராஜ் மஹாலில் ஊர் காவல் படை தின விழா நடந்தது. இந்த விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதி கவுசிக் தேவ் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, சங்கு முன்னிலை வகித்தார். ஊர்க்காவல் படை சேலம் மண்டல கூடுதல் தலைவர் மகா அஜய் பிரசாத் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பான முறையில் பணியாற்றிய ஊர்க்காவல் படையினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து, 24 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணகிரி படைத்தளபதி வெங்கடேசனுக்கு பணி நிறைவு விழா நடந்தது. இந்த விழாவில் இன்ஸ்பெக்டர்கள் குலசேகரன், பிரகாஷ், ஊர்க்காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உதவி தளபதி மணிகண்டன், ஊர் காவல் படை வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் முதியோர் காப்பகத்தில் உலக முதியோர் தின விழா நடந்தது.
    • சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் நடத்தப்பட்டது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் முதியோர் காப்பகத்தில் உலக முதியோர் தின விழா நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி முதியோர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந் தேதி முதியோர் தின விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் நோக்கம் ஒவ்வொரு முதியோர் இல்லத்திலும் வயதான பெரியவர்கள் தங்கி வரும் வேளையில், அவர்கள் பல்வேறு நிலைகளில் இருந்ததை எண்ணி மனக்கவலையுடன் இருப்பார்கள். அதை மாற்றி சந்தோசமாக அவர்கள் இருக்க வேண்டும் என்பதை எண்ணி அரசே ஓவ்வொரு ஆண்டும் முதியோர் தின விழாவை நடத்தி அவர்களது கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றி தருவதுடன் பல்வேறு திட்டங்களையும் அரசு வழங்கி வருகிறது.

    முதியோர் இல்லங்களில் தங்கியுள்ள முதியவர்கள் கடந்த கால நிலையை எண்ணி கவலை படக் கூடாது. முதியவர்களும் குழந்தைகளும் ஒன்றே.காரணம் குழந்தைகள் எதிர்காலம் பற்றி நினைக்காமல் சந்தோசமாக இருப்பார்கள். அதேபோல வயது முதிர்வில் உள்ள நீங்கள் கடந்த காலங்களை எண்ணி கவலைப்படாமல், இருக்கும் இடத்தில் சந்தோசமாக இருக்க வேண்டும்.

    இதுபோன்ற காப்பகங்களில் பல்வேறு இடங்களில் இரு0ந்து அறிமுக இல்லாத நபர்கள் உங்களுடன் சேர்ந்து தங்கி இருக்கும் நிலை ஏற்படும்.அப்போது அவர்களுடன் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி நட்பை உருவாக்கி சந்தோசமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அதனை தொடர்ந்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் 11 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளையும், கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

    இதில் கோட்டாட்சியர் மரகதநாதன், மாவட்ட சமூகநல அலுவலர் சாந்தி, முதியோர் இல்ல ஒருங்கிணைப்பாளர் ஜான் பிரிட்டோ, பார்த்திபனூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுகன்யா சதீஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சுதந்திரத்தின அமுதப் பெரு விழாவை அனைத்து இல்லங்களிலும் தேசியக் கொடியை பறக்க விட்டு கொண்டாடிட பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • இதன் விலை ரூ.25 மட்டுமே. இதற்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாது.

    பரமத்திவேலூர்:

    சுதந்திரத்தின அமுதப் பெரு விழாவை அனைத்து இல்லங்களிலும் தேசியக் கொடியை பறக்க விட்டு கொண்டாடிட பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார் . இதையடுத்து வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவதற்காக அனைவருக்கும் கொடி எளிதில் கிடைக்கும் வகையில் நாமக்கல் கோட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், பரமத்தி, ஜேடர்பாளையம் உள்ளிட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் இந்திய தேசியக் கொடியானது விற்பனைக்கு உள்ளது.

    இதன் விலை ரூ.25 மட்டுமே. இதற்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாது.இந்திய தேசியக் கொடியை https://www.epostoffice.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். தேசியக்கொடி ஆனது தபால்காரர் மூலமாக வீடுகளுக்கு பட்டுவாடா செய்யப்படும்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் தேசியக்கொடியை ரூ 25 மட்டும் செலுத்தி பெற்றுக்கொண்டு சுதந்திரத்தின் அமுதப் பெரு விழாவை இந்திய அஞ்சல் துறையோடு கொண்டாடுமாறு நாமக்கல் கோட்ட அஞ்சல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் நிறு வனங்கள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் மொத்தமாக தேசியக்கொடியை வாங்கிட விரும்பினால் நாமக்கல் கோட்டத்தின் வணிக வளர்ச்சி அலுவலர்களான நாமக்கல் தலைமை அஞ்சலகம் சிவக்குமார் மற்றும் திருச்செங்கோடு தலைமை அஞ்சலகம் சங்கர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு அஞ்சல் துறை அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ×