search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திக்கணங்கோடு"

    • செம்பொன் விளை-திக்கணங்கோடு சாலையில் நாட்டு வைத்திய சாலை நடத்தி வருகிறார்.
    • 4 பவுன் நகை பறிப்பு

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே பெத்தேல்புரம் படுவாக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 71).

    இவர் செம்பொன் விளை-திக்கணங்கோடு சாலையில் நாட்டு வைத்திய சாலை நடத்தி வருகிறார். கடந்த 24-ந்தேதி வைத்திய சாலையில் ஜார்ஜ் இருந்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை தாக்கிவிட்டு 4 பவுன் நகையை பறித்து சென்றார்.

    இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப் பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பாக கொடுப்ப குழியை சேர்ந்த சிவசங்கு (53) அவரது மகன் கார்த்திக் என்ற ஜோதி (29), அபிஷேக் (22), சுபின் (19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அபிஷேக் அரசு ஊழியர் ஆவார். கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் கொடுப்ப குழியை சேர்ந்த சிவா (27) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    முக்கிய குற்றவாளியான இவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டி ருந்தது. தனிப்படை போலீ சார் சிவாவை தேடி வந்த னர். இந்த நிலையில் சிவா இரணியல் கோர்ட்டில் நேற்று மாலை சரணடைந்தார். போலீசார் அவரை காவல் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    • திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • 14-ந் தேதி இரவு 8.30 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    தென் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற கத்தோலிக்க தேவாலயமான மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பெருவிழா ஆண்டு தோறும் ஆகஸ்ட் 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15-ந் தேதி வரை நடை பெறும்.

    அதன்படி இந்தாண்டு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி ஜெபமாலை, புகழ்மாலையும் தொடர்ந்து பாளையங்கோட்டை மறை மாவட்ட மேதகு ஆயர் அந்தோணி சாமி தலைமை தாங்கி ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் கொடியை ஏற்றி வைத்தார். பங்குதந்தை ஜெஸ்டின் பிரபு முன்னிலை வகித்தார். தொடர்ந்து 6.45 மணிக்கு நடைபெற்ற திருப்பலிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட மேதகு ஆயர் அந்தோணி சாமி தலைமையேற்று அருளுரை வழங்கி திருப்பலி நிறைவேற்றினார்.

    விழாவில் ஆலய பங்கு தந்தை ஜெஸ்டின் பிரபு, இணை பங்குதந்தை அருட்பணி சகாய ஜோபின், பங்கு பேரவை துணை தலைவர் பெர்னாண்டஸ், செயலாளர் மைக்கலோஸ் ஜோண் ஆப்ஆர்க் ஜோஸ், பொருளாளர் செல்லம், துணை செயலாளர் கிறிஸ்துதாஸ் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், பங்கு இறைமக்கள், அருட்சகோதரிகள், பாதிரி யார்கள், திக்கணங்கோடு, அருளானந்தபுரம், மானான்விளை கிளை பங்குகளின் மக்கள் மற்றும் குமரி மாவட்டம் மற்றும் தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழாவில் பக்தர் களுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலியும் மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலையும் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு திருப்பலியும், மறையுரையும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.2-ம் நாள் திருவிழா அன்று காலை 9 மணிக்கு திருப்பலியும் தொடர்ந்து அன்பின் விருந்தும் நடைபெறுகிறது. 9-ம் நாள் திருவிழாவாகிய 14-ந் தேதி காலை 8.30 மணிக்கு குழந்தைகளுக்கு முதல் திருவிருந்தும் மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை ஆரதனையும், இரவு 8.30 மணிக்கு தேர்பவனியும் நடைபெறுகிறது.

    10-ம் நாள் திருவிழா வாகிய 15-ந் தேதி காலை 5 மணி, காலை 6 மணி, திருப்பலியும், காலை 7 மணிக்கு மலையாள திருப்பலியும் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 9 மணிக்கு அன்னையின் விண்ணேற்பு பெருவிழா, இந்திய சுதந்திர தினவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. இந்த கூட்டுத் திருப்பலிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் மேதகு ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையேற்று அருளுரை வழங்குகிறார். காலை 11 மணிக்கு புனித ஆரோபண அன்னையின் தேர் பவனியும், இரவு 7 மணிக்கு சிறப்பு நற்கருணை ஆசீர் மற்றும் சிவகாசி வாணவேடிக்கையும் நடை பெறுகிறது. பத்தாம் நாள் திருவிழாவில் ஜாதி, மத வேறுபாடு இன்றி குமரி மாவட்டம் மற்றும் தமிழகம், கேரளா, கர்நாடகா, போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசி பெற்று செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவிற்கான ஏற்பாடு களை பங்குதந்தை ஜெஸ்டின் பிரபு தலைமையில் இணை பங்குதந்தை அருட்பணி சகாய ஜோபின், பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணி பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.

    ×