குளச்சல் அருகே வைத்தியரிடம் நகை பறித்த முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரண்

செம்பொன் விளை-திக்கணங்கோடு சாலையில் நாட்டு வைத்திய சாலை நடத்தி வருகிறார்.4 பவுன் நகை பறிப்பு
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கன்னியாகுமரி:

குளச்சல் அருகே பெத்தேல்புரம் படுவாக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 71).

இவர் செம்பொன் விளை-திக்கணங்கோடு சாலையில் நாட்டு வைத்திய சாலை நடத்தி வருகிறார். கடந்த 24-ந்தேதி வைத்திய சாலையில் ஜார்ஜ் இருந்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை தாக்கிவிட்டு 4 பவுன் நகையை பறித்து சென்றார்.

இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப் பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக கொடுப்ப குழியை சேர்ந்த சிவசங்கு (53) அவரது மகன் கார்த்திக் என்ற ஜோதி (29), அபிஷேக் (22), சுபின் (19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அபிஷேக் அரசு ஊழியர் ஆவார். கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் கொடுப்ப குழியை சேர்ந்த சிவா (27) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

முக்கிய குற்றவாளியான இவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டி ருந்தது. தனிப்படை போலீ சார் சிவாவை தேடி வந்த னர். இந்த நிலையில் சிவா இரணியல் கோர்ட்டில் நேற்று மாலை சரணடைந்தார். போலீசார் அவரை காவல் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com