search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாளவாடி பகுதியில்"

    • தாளவாடி கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட ப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து அவர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடு களை ஆய்வு செய்து நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து கேட்டறிந்து அதற்கு உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் தாளவாடி தாசில்தார் அலுவலகத்தை நேரில் சென்று பார்வை யிட்டு அங்கு பரா மரிக்கப்பட்டு வரும் பதி வேடுகள் மற்றும் அலுவலக கோப்புகள் ஆகியவற்றை பார்வையிட்டார். அதே போல் அங்கு செயல்பட்டு வரும் இ-சேவை மையம், கணினி அறை, பதிவறை ஆகியவற்றை பார்வையிட்டு பொதுமக்கள் வருகை குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து தாளவாடி மேம்படுத்த ப்பட்ட அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தினை பார்வையிட்டு அங்கு செயல்படும் பல் மருத்துவ பிரிவு மற்றும் ஆய்வகம், சித்த மருத்துவ பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு ஆகிய பிரிவுகளை பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

    தொடர்ந்து கலெக்டர் தாளவாடி ஊராட்சி ஒன்றியம் எல்லக்கட்டை, பாரதிபுரம் பகுதியில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் கட்ட ப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணி, கும்மட புரம் சிவம்மா தோட்டம் அருகே ரூ.20.88 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ள தையும், இக்கலூர் ஊராட்சி, சிக்கள்ளி பகுதியில் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் பழுது நீக்கம் செய்யப்பட்ட பணி, ஓசூர் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட ப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார்.

    ஈரோடு விற்பனை குழு, தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் 500 மெட்ரிக் டன், குளிர்பத னக்கிடங்கு கட்டப்பட்டு வரும் பணி, ரூ.2 கோடி மதிப்பீட்டில் 1000 மெட்ரிக் டன் அளவிலான தேசிய மின்னணு பரிவர்த்தனை கிடங்கு கட்டப்பட்டு வரும் பணி, திகினாரை முதல் சோழகர் ரெட்டி வரை ரூ.48.90 லட்சம் மதிப்பீட்டில் 2.8 கி.மீட்டர் நீளம் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக கலெக்டர் மல்கொத்திபுரம் பகுதியில் விளைநிலங்களில் யானை போகாமல் பாது காப்ப தற்காக அகழியில் அமைக்க ப்பட்டுள்ள சூரிய மின்சக்தி யுடன் கூடிய மின்வேலியை பார்வையிட்டார்.

    மேலும், திகினாரை பகுதியில் மனோஜ் குமார் என்ற விவசாயி தனது 30 ஏக்கர் நிலத்தில் ரோஸ்மேரி என்ற செடி வகை பயிரிட்டுள்ளதை பார்வை யிட்டார். இந்த ரோஸ்மேரி செடி வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுவதால் பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இந்த செடி குறித்து விபரங்களை விவசாயிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து தலமலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உண்டு உறை விட உயர்நிலைப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டு அங்கு ஆசிரியர் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கணக்கு பாடம் கற்பிப்பதை மாணவர்களோடு தானும் அமர்ந்து பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர், ஆசனூர் வனக்கோட்டம் (சத்திய மங்கலம் புலிகள் காப்பகம்) தேவேந்திர குமார் மீனா, தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை குழு செயலாளர் சாவித்திரி, வட்டார வள ர்ச்சி அலுவலர்கள் மனோ கரன், அர்த்தநாரீஸ்வரன், தாசில்தார் ரவிசங்கர், உதவி பொறியாளர் பாண்டிய ராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    ×