search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தளவாடப்பொருட்கள்"

    • அதிகபட்ச மதிப்பீடு தொகை கோருபவர்களுக்கு மேற்படி தளவாட பொருட்கள் வழங்கப்படும்.
    • மரத்தினால் ஆன மேஜை 11, மரத்தினால் ஆன நாற்காலி 46, ஒயர் பின்னிய மர நாற்காலி 15, மரத்தினால் ஆன மேடை 13 உள்பட 24 வகையான பொருட்கள் மொத்தம் 202 ஆகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கும் நீதிமன்றங்களிடமிருந்து பெறப்பட்ட பழுதடைந்த மரம் மற்றும் இரும்பினால் ஆன அலுவலக தளவாட பொருட்கள் (நாற்காலி, மேஜை, பீரோ போன்றவைகள்) பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அந்த பழுதடைந்த அலுவலக தளவாட பொருட்களின் விபர பட்டியல் இதனடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி பழுதடைந்துள்ள அலுவலக தளவாட பொருட்களின் விவரப்பட்டியலுடன் நேரில் சரிபார்த்து ஏலம் எடுக்க விரும்புவோர் இன்றிலிருந்து 15 தினங்களுக்குள் நீதிமன்ற அலுவலக நாட்களில் முதன்மை நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்து கொண்டு மேற்படி தளவாட பொருட்களை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிட்டு பின்பு அதன் மதிப்பீட்டு பட்டியலை தனிக்கவரில் சீல் வைத்து முதன்மை மாவட்ட நீதிபதி, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு தபால் மூலமாக வரும் 12.12.2022-க்குள் அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், 12.12.2022-ம் தேதிக்கு பின்வரும் இப்பொருள் தொடர்பான வேறு ஏதேனும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    அதிகபட்ச மதிப்பீடு தொகை கோருபவர்களுக்கு மேற்படி தளவாட பொருட்கள் வழங்கப்படும்.

    மேற்படி அலுவலக தளவாட பொருட்களுக்கு அதிக மதிப்பீடு கேட்பு செய்த நபர் உடனடியாக அந்த தொகையை செலுத்தி அவர் செலவிலேயே பொருட்களை எடுத்து க்கொள்ள வேண்டும்.

    மரத்தினால் ஆன மேஜை 11, மரத்தினால் ஆன நாற்காலி 46, ஒயர் பின்னிய மர நாற்காலி 15, மரத்தினால் ஆன மேடை 13 உள்பட 24 வகையான பொருட்கள் மொத்தம் 202 ஆகும். இந்த தளவாடப் பொருட்கள் பொது ஏலம் விடப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

    ×