search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் வளர்ச்சி துறை"

    • 2022- 23ம் ஆண்டிற்கு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடை யேயான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
    • பாராட்டு சான்றிதழ்கள் மாவட்ட கலெக்டர் வாயிலாக வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2022- 23ம் ஆண்டிற்கு மாவட்ட நிலை யில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடை யேயான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர்கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் திருப்பூர்மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் இளங்கோ வரவேற்புரையாற்றினார். முன்னதாக திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியின் முதல்வர் எழிலி போட்டி களைத் துவக்கி வைத்து தொடக்கவுரை யாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். கவிதை போட்டியில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி இளங்கலை கணினிஅறிவியல் இரண்டாமாண்டு மாணவி சத்தியபிரியா முதல் பரிசும், அவிநாசிஅரசுக் கலை மற்றும அறிவியல் கல்லூரி மூன்றாமாண்டு வணிக நிர்வாகவியல்பயிலும் மாணவி அபாரணி இர ண்டாம் பரிசும், முத்தூர் கருப்பண்ணன் மாரிய ப்பன்கல்லூரி இளங்கலை கணிதம் இரண்டாமாண்டு பயிலும் மாணவி சிவாத்தாள் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

    கட்டுரைப் போட்டியில் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரி இளங்கலை ஆங்கிலம் மூன்றாமாண்டு மாணவி ஈ. கீதாஸ்ரீ முதல் பரிசும்,திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்க லைமுதலாமாண்டு வணிகவியல் மாணவி முத்துலட்சுமி இரண்டாம் பரிசும்,திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி முதுகலை ஆங்கில இலக்கியம் முதலா மாண்டு மாணவி ஜெனிபர் ஜாஸ்மின் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

    பேச்சுப்போட்டியில் உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு முதுகலை வரலாறு பயிலும் மாணவி விஷ்ணு ப்பிரியாமுதல் பரிசும், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் கூட்டுறவு இரண்டாமா ண்டுபயிலும் மாணவி விஜி இரண்டாம் பரிசும், திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கலை க்கல்லூரியில் மூன்றாமாண்டு இளம் அறிவியல் வேதியியல் பயிலும் மாணவி பிருந்தா மூன்றாம் பரிசும் பெற்றனர்.

    மாவட்ட நிலையில் நடைபெற்ற கவிதை, கட்டுரை மற்றும்பேச்சு ப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000ம், இரண்டாம் பரிசு ரூ.7000ம், மூன்றாம் பரிசு ரூ.5000 மற்றும் பாராட்டுச்சான்றித ழ்கள் மாவட்ட கலெக்டர் வாயி லாக வழங்கப்படும்.இந்நிகழ்ச்சியின் முடிவில் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியின் கௌரவ விரிவுரையாளர் நந்தினி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிகளில் திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலு வலக ப்பணியாளர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×