search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடகள சங்கம்"

    • மதுரை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • மதுரை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோச்சடையில் நடைபெற்றது.

    மதுரை

    மதுரை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோச்சடையில் நடை பெற்றது. கூட்டத்திற்கு திருநாவுக்கரசு தலைமை வகித்தார். கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் தலைவராக ஆனந்தகுமார், செயலா ளராக சுலைமான், பொருளா ராக வைகுந்தசிங் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிச்சாமி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

    கூட்டத்தில் வரும் ஆகஸ்டு மாதம் மாவட்ட அளவில் மூத்தோர் தடகள விளையாட்டு போட்டிகளை நடத்துவது, மது பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதை வலியுறுத்தி வருகிற நவம்பர் மாதம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    இந்த நிகழ்ச்சியை செந்தமிழ் அரசு தொகுத்து வழங்கினார். முடிவில் சந்துரு நன்றி கூறினார்.

    • சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தடகள சங்கத்தின் பார்வையாளர் சிவராஜ் கலந்துகொண்டு பேசினார்.
    • போட்டியில் சுமார் 800 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தமிழ்நாடு தடகள சங்க தலைவர் வால்டர் தேவாரம் மற்றும் செயலாளர் லதா ஆகியோரின் வழிகாட்டுதலின் படி தென்காசி மாவட்ட தடகள சங்கத்தின் தொடக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் தென்காசியில் நடை பெற்றது.

    கூட்டத்தில் ஆலங்குளம் ஆலடி எழில் வாணன் தலைவராகவும், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வழக்கறிஞர் செல்ல பாண்டியன் மாவட்ட செயலா ளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தடகள சங்கத்தின் பார்வையாளர் சிவராஜ் கலந்துகொண்டு பேசினார்.

    தென்காசி மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் ஆலடி எழில்வாணன் மற்றும் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்லப் பாண்டியன் ஆகியோர் பேசுகையில், தென்காசி மாவட்டத்தில் உருவாகியுள்ள மாவட்ட தடகள சங்கம் சிறப்பாக செயல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் விளை யாட்டுகளில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து மாவட்ட, மாநில, தேசிய அளவில், நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செய்வதோடு அவர்களை போட்டிகளில் வெற்றி பெறச் செய்வதே இந்த சங்கத்தின் நோக்கம் என்றும் அந்த நோக்கம் வெற்றிபெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றனர்.

    முன்னதாக தென்காசி தடகள சங்கத்தின் சார்பாக பங்களா சுரண்டை பேரன்ப்ரூக் பள்ளியில் மாவட்ட அளவிளான தடகள போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 800 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு தடகள சங்கத்தின் பார்வையாளர் சிவராஜ் பரிசுகளை வழங்கினார். ஆண்கள் பிரிவில் பால்கன் அத்லெட்டிக் பவுண்டேஷனும், பெண்கள் பிரிவில் கிராம கமிட்டி பள்ளியும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பால்கன் அத்லெட்டிக் பவுண்டேஷனும் தட்டிச் சென்றன.

    புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக போட்டிகள், பயிற்சி முகாம்கள், பயிற்சிகள் கருத்தரங்கம் போன்றவை தொடர்ந்து நடைபெறும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். தென்காசி மாவட்ட தடகள சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் நன்றி கூறினார்.

    ×