மூத்தோர் தடகள சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

மதுரை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோச்சடையில் நடைபெற்றது.
மதுரை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்.
மதுரை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்.
Published on

மதுரை

மதுரை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோச்சடையில் நடை பெற்றது. கூட்டத்திற்கு திருநாவுக்கரசு தலைமை வகித்தார். கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் தலைவராக ஆனந்தகுமார், செயலா ளராக சுலைமான், பொருளா ராக வைகுந்தசிங் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிச்சாமி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

கூட்டத்தில் வரும் ஆகஸ்டு மாதம் மாவட்ட அளவில் மூத்தோர் தடகள விளையாட்டு போட்டிகளை நடத்துவது, மது பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதை வலியுறுத்தி வருகிற நவம்பர் மாதம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

இந்த நிகழ்ச்சியை செந்தமிழ் அரசு தொகுத்து வழங்கினார். முடிவில் சந்துரு நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com