search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க நகைகளை"

    • வீட்டில் யாரும் இல்லாத போது தனியாக இருந்த வசந்தியிடம் பிரகாஷ் எலக்ட்ரீசியன் பொருட்கள் தேவைப்படுகிறது எனக்கூறி வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு அழைத்து சென்றார்.
    • பின்னர் மயக்கம் தெளிந்த வசந்தி கூச்சலிட பிரகாஷ் அருகில் இருந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கி தங்க நகைகளுடன் தப்பி ஓட்டம் பிடித்தார்.

    பவானி, செப். 13-

    பவானி அருகே உள்ள மாமரத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மனைவி வசந்தி (39). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    பில்டிங் காண்ட்ரா க்டரான வெங்கடேஷ் தனது கட்டிடங்களின் எலக்ட்ரீசியன் வேலை செய்ய மனைவி வசந்தியின் தங்கை மகனான சேலம் மாவட்டம் கொங்க ணாபுரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (25) என்பவரை வீட்டில் தங்க வைத்து வேலைக்கு வைத்து இருந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தனியாக இருந்த வசந்தியிடம் பிரகாஷ் எலக்ட்ரீசியன் பொருட்கள் தேவைப்படுகிறது எனக்கூறி வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு அழைத்து சென்றார்.

    அப்போது திடீரென பிரகாஷ் அருகில் இருந்த வயரை எடுத்து கழுத்தை நெரித்து வசந்தியை மயக்கம் அடைய செய்தார். இந்நிலை யில் அவர் அணிந்திருந்த தாலி மற்றும் தங்க நகைகளை பிரகாஷ் திருடி சென்றார்.

    பின்னர் மயக்கம் தெளிந்த வசந்தி கூச்சலிட பிரகாஷ் அருகில் இருந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கி தங்க நகைகளுடன் தப்பி ஓட்டம் பிடித்தார்.

    இதனையடுத்து வெளியே சென்று வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் தனது மனைவி ரத்த வெள்ளத்தில் வீட்டில் கிடந்ததை தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சித்தோடு போலீசாரிடம் புகார் அளித்தார்.

    சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்குப்பதிவு செய்து இச்ச சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தலைமறைவாக இருந்த பிரகாஷை சித்தோடு போலீசார் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பிரகாஷ் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. அந்த கடனை அடைக்க சித்தி திருமணம் நிகழச்சிக்கு சென்று வந்த போது வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வயரால் கழுத்தை நெரித்து மயக்க மடைய செய்து உள்ளார்.

    மயக்கம் தெளிந்த வசந்தி கூச்சல் இட்டதால் பின்னர் இரும்பு கம்பியால் தாக்கி சித்தியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் தங்க நகைகள் 19 பவுனை திருடி தப்பி ஓட்டம் பிடித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து சித்தோடு போலீசார் பிரகாசை கைது செய்து கோபி மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

    ×