search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது"

    • 2-ம் கட்டமாக மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ண ப்பம் மற்றும் டோக்கன் விநியோகக்கும் பணி இன்று தொடங்கியது.
    • இதில் 568 ரேஷன் கடைகளை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

    ஈரோடு:

    மகளிர் உரிமைத்தொ கையாக மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கப்படுகிறது. முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக முதல் கட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன்கள் விநியோகம் கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடந்தது.

    அப்போது விண்ணப்பம் பெறாத வர்கள், வீடு பூட்டி இருந்தது போன்ற காரணத்துக்கான விண்ணப்பங்கள் அந்தந்த பகுதி ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்கள் பெற்று வருகின்றனர்.

    முதற்கட்ட விண்ணப்பதா ரர்களுக்கு கடந்த மாதம் 24-ந் தேதி முதல் வரும் 4-ந் தேதி வரை பதிவேற்ற முகாம் நடந்து வருகிறது. இந்த பணியில் இல்லம் தேடி கல்வித்திட்ட பணியாளர்கள், வருவாய் துறையி னர், கூட்டுறவு துறையினர் என மொத்தம் 3 ஆயிரத்து 177 பேர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் 2-ம் கட்டமாக மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ண ப்பம் மற்றும் டோக்கன் விநியோகக்கும் பணி இன்று தொடங்கியது.

    இதில் 568 ரேஷன் கடை களை சேர்ந்த வர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படு கிறது. ரேஷன் கடை ஊழி யர்கள் தங்கள் பகுதியில் ஒதுக்க ப்பட்ட ஒவ்வொரு வீடுகளாக சென்று மகளிர் உரிமை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ண ப்பம் வழங்கி வருகின்றனர்.

    வரும் 4-ம் தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது.அதைத்தொடர்ந்து வரும் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 544 இடங்களில் பதிவேற்ற முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.

    முதற்கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 532 ரேஷன் அட்டை தாரர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு ள்ளன.

    ×