search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி ஓட்டல்"

    ராகுல் காந்தி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கின் குற்றவாளி நீரவ் மோடியை டெல்லி ஓட்டலில் சந்தித்ததாக சமூக ஆர்வலர் ஷேக்சாத் பூனாவாலா புகார் கூறியுள்ளார். #RahulGandhi #NiravModi
    புதுடெல்லி:

    நிதி மந்திரி அருண் ஜெட்லியை, விஜய்மல்லையா வெளிநாடு தப்பிச்செல்லும் முன்பு பாராளுமன்றத்தில் சந்தித்தார். இதனை காங்கிரஸ் எம்.பி. புனியா பார்த்தார் என்று ராகுல் காந்தி புகார் கூறினார். இந்த புகார் கூறிய சிறிது நேரத்தில் சமூக ஆர்வலர் ஷேக்சாத் பூனாவாலா, ராகுல் காந்தி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கின் குற்றவாளி நீரவ் மோடியை டெல்லி ஓட்டலில் சந்தித்தார் என புகார் கூறினார்.



    2013-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி டெல்லி இம்பீரியல் ஓட்டலில் நடந்த ஒரு திருமண மது விருந்தில் ராகுல் காந்தி நீரவ் மோடியை நீண்டநேரம் சந்தித்து பேசினார். நீரவ் மோடிக்கும், அவரது உறவினர் மொகுல் சோக்சிக்கும் தவறாக கடன் வழங்கிய அதே காலகட்டத்தில் இந்த சந்திப்பு நடந்தது. ராகுல் காந்தியின் பாதுகாப்பு படையினரிடம் இதற்கான ஆவணங்கள் இருக்கும். இதனை ராகுல் காந்தி மறுக்க தயாரா? அல்லது உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா? இதை தவறு என நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார் என்று பூனாவாலா கூறியுள்ளார். ஆனாலும் இதனை காங்கிரஸ் மறுத்துள்ளது. #RahulGandhi #NiravModi 
    பாலியல் தொழிலுக்காக வளைகுடா நாடுகளுக்கு கடத்தும் நோக்கத்தில் டெல்லி ஓட்டலில் அடைத்து வைக்கப்பட்ட 39 நேபாளப் பெண்களை டெல்லி மகளிர் ஆணையம் மீட்டது. #DCWrescues #39girlsrescue #Delhihotel
    புதுடெல்லி:

    மலேசியா, தென் கொரியா, சவுதி அரேபியா, துபாய், பஹ்ரைன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா   நாடுகளில் நேபாளத்தை சேர்ந்த சுமார் 3 கோடி பேர் புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களின் மூலம் நேபாளத்துக்கு வரும் பணத்தால் அந்நாட்டு அரசுக்கு பெரும் வருவாய் கிடைக்கிறது. நேபாளத்தின் மொத்த உள்நாட்டு வருவாயில் 25 சதவீதம்  இதன் வழியாக கிடைக்கிறது.

    நேபாள நாட்டிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு சட்டவிரோதமாக ஏழைப் பெண்கள் கடத்தப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

    நேபாள போலீசாரின் புள்ளி விபரங்களின்படி, மனித கடத்தல் தற்போது அதிகரித்துள்ளது. 181 ஆக இருந்த கடத்தல் புகார்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் 268 ஆக உயர்ந்துவிட்டது. இப்படி கடத்தப்பட்டவர்களில்  80 சதவிகிதம் இளம்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



    இந்நிலையில் டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக நேபாள நாட்டு பெண்கள் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மகளிர் ஆணையத்துக்கு ரகசிய தகவல் வந்தது. இதுதொடர்பாக உடனடி நடவடிக்கையில் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால் களமிறங்கினார்.

    இதையடுத்து, டெல்லி போலீசாருடன் சேர்ந்து  ஆணையத்தை சேர்ந்தவர்கள் அந்த ஓட்டலில் நேற்று பின்னிரவு சோதனை நடத்தினர். அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த  39  நேபாள நாட்டுப் பெண்களை அவர்கள் மீட்டனர்.



    சில நாட்களுக்கு முன்னர் டெல்லி வசந்த விகார் பகுதியில் இயங்கி வந்த சர்வதேச விபச்சார கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடம் சிக்கியிருந்த நேபாளத்தை சேர்ந்த 16 பெண்கள் உள்பட 18 பெண்களை மீட்டது நினைவிருக்கலாம். கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 150 பெண்களை விபசார தரகர்கள் பிடியில் இருந்து டெல்லி போலீசார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #DCWrescues #39girlsrescue #Delhi hotel
    ×