search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்"

    • டெக்சாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களே சேர்த்தது.
    • சியாட்டில் ஓர்காஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    டல்லாஸ்:

    மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சியாட்டில் ஓர்காஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டெக்சாஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    அதன்படி களமிறங்கிய டெக்சாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களே சேர்த்தது. சியாட்டில் அணி தரப்பில் ஆண்ட்ரூ டை 3 விக்கெட், இமாத் வாசிம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 127 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சியாட்டில் ஓர்காஸ் அணி களம் இறங்கியது.

    சியாட்டில் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டி காக்கின் அதிரடியால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் சியாட்டில் ஓர்காஸ் அணி 15 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 127 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    சியாட்டில் அணி தரப்பில் டி காக் 50 பந்தில் 88 ரன் குவித்தார். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 2-ம் இடம் பிடித்த டெக்சாஸ் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. டெக்சாஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் எம்.ஐ நியூயார்க் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    • சாம்ஸ் 18 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
    • 19.1 ஓவரில் 172 ரன்கள் எடுத்து டிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.

    அமெரிக்காவில் முதல் முறையாக மேஜர் லீக் கிரிக்கெட் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய மூன்று அணிகள் ஐபிஎல் அணிகளின் கிளை அணிகளாக உள்ளன.

    இந்நிலையில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சான் பிரான்சிஸ்கோ 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று விளையாடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் 14 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து அதிரடியாக பேட் செய்த டேனியல் சாம்ஸ், அணியை வெற்றிக்கு பாதைக்கு அளித்து சென்றார்.

    சாம்ஸ் 18 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். இதனால் 19.1 ஓவரில் 172 ரன்கள் எடுத்து டிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது அணியாக டிஎஸ்கே ப்ளேஆப் சுற்றுக்கு நுழைந்துள்ளது.

    இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் - சீட்டில் ஆர்காஸ் அணிகள் மோதுகின்றன. 

    • பொல்லார்ட் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.
    • 17 ரன்கள் வித்தியாசத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

    அமெரிக்காவில் முதல் முறையாக மேஜர் லீக் டி20 என்ற புதிய கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் ஐபிஎல் தொடரில் சென்னை நிர்வகிக்கும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை நிர்வகிக்கும் எம்ஐ நியூயார்க் ஆகிய அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற டெக்ஸாஸ் கேப்டன் டு பிளிசிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேவோன் கான்வே 74 ரன்கள் எடுத்தார்.

    அதைத்தொடர்ந்து 155 என்ற சுலபமான இலக்கை துரத்திய எம்ஐ அணிக்கு ஆரம்பத்திலேயே மோனக் படேல் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்து வந்த ஸ்டீவன் டெய்லர் 15 (21) ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை ஏற்படுத்தினார். அதைவிட அடுத்து வந்த அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரானும் தடுமாற்றமாகவே செயல்பட்டு 19 (15) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார்.

    அடுத்து வந்த கேப்டன் பொல்லார்ட் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார். அதனால் மிகப்பெரிய அழுத்தத்திற்குள்ளான அந்த அணிக்கு கடைசி நேரத்தில் டிம் டேவிட் 24 (19) ஹமத் அசாம் 13 (12) ரசித் கான் 13* (9) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.

    டெக்சாஸ் அணி 20 ஓவர்களில் எம்ஐ அணியை 137/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெக்சாஸ் சார்பில் அதிகபட்சமாக முகமது மோசின் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ×