search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீக்கடைக்கு"

    • அந்தியூர் அடுத்த பர்கூரில் சம்பவத்தன்று பர்கூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • பவானி காடையாம்பட்டி பகுதியில் களஞ்சியம் என்கிற வஜ்ரவேலுக்கு சொந்தமான டீக்கடையையும் பவானி வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.

    பவானி:

    அந்தியூர் அடுத்த பர்கூரில் சம்பவத்தன்று பர்கூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது.

    சோதனையில் மக்காச்சோளம் ஏற்றி வந்த அந்த வாகனங்களின் மறைவாக 1475 கிலோ எடை கொண்ட சாக்கு மூட்டைகளில், குட்கா, ஹான்ஸ், பான் மசாலா போன்ற போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்பு டைய பவானி அந்தியூர் ஜங்ஷன் சோதனைசாவடி வீதியை சேர்ந்த அருண் (36), திருவள்ளுவர் நகர் பகுதியில் வசிக்கும் களஞ்சியம் என்கிற வஜ்ரவேல் (53), பவானி மயிலம்பாடி கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (48), கர்நாடக மாநிலம் சி.எம்.நகரை சேர்ந்த ரமேஷ் (60), ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த திருப்பதி (32), கடத்தூர் பகுதியை சேர்ந்த அசோக் குமார் (35) மற்றும் சத்தியமங்கலம் கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்கிற கவுதம் (31) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருத்து ரூ.13 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் 1475.5 கிலோ பறிமுதல் செய்தனர்.

    இது போன்ற குற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுபடி பவானி காடையாம்பட்டி பகுதியில் களஞ்சியம் என்கிற வஜ்ரவேலுக்கு சொந்தமான டீக்கடையையும் பவானி வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.

    ×