search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் ஓட்டம்"

    • அனுமதி பெறாமல் லாரி மூலம் ஜல்லி ஏற்றிக்கொண்டு வருவதாக கிடைத்தது.
    • லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சேர்ந்த நாடு அருகே உள்ள கள்ள மேடு பகுதியில் இருந்து அனுமதி பெறாமல் லாரி மூலம் ஜல்லி ஏற்றிக்கொண்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் விழுப்புரம் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் அருள்முருகன் சம்பவ இடத்திற்கு சென்றார். மேப்புலியூர் என்ற இடத்தில் லாரியை அவர் மடக்கி பிடித்தார். லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். லாரியை அங்கிருந்து எடுத்துக்கொண்டு உளுந்தூர்பேட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக காரிமங்கலம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் அந்தக் கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம், கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக காரிமங்கலம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப் இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் போலீசார் தலைமையில் காரிமங்கலம் அகரம் பிரிவு சாலை, மொரப்பூர் சாலை, பெரியாம்பட்டி பிரிவு சாலை உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது காரிமங்கலம் அருகே அகரம் பிரிவு சாலை அருகே பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற சொகுசு கார் அதி வேகமாக வந்தது. போலீசார் காரை நிறுத்த முற்பட்டபோது டிரைவர் சிறு தூரம் தள்ளி காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

    போலீசார் சந்தேகம் அடைந்து காரை சோதனை செய்தபோது மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சுமார் 500 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அந்தக் கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    அந்த கார் எங்கிருந்து வந்தது? குட்கா கடத்தியவர்கள் யார்? என்ற விவரம் தெரியவில்லை இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ராமநாதபுரம் அருகே வேனில் கடத்திய 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • வேனை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே கடலோர பாதுகாப்பு குழுமபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் திருப்புல்லாணி சோதனை சாவடியில் இன்று அதிகாலை 3 மணியளவில் வாகன சோதனை நடத்தனர்.

    அப்போது அந்த வழியாக ரெகுநாதபுரத்தில் இருந்து இ.சி.ஆர். சாலையில் செல்ல முயன்ற ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். அவரை போலீசார் விரட்டிச்சென்றனர். அவர் உத்திரகோசமங்கை சாலையில் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றார்.

    அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 50 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 2,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அரிசி மூட்டைகளை கைப்பற்றிய போலீசார் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகளையும், வாகன த்தையும் ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    ×