search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரம்ப் இரங்கல்"

    அமெரிக்காவின் பிரபல சமையல் கலைஞரான அந்தோணி போர்டைன் மரணம் அடைந்ததையொட்டி, அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AnthonyBourdain #died
    நியூயார்க்:

    அமெரிக்காவின் பிரபல சமையல் கலைஞர் அந்தோணி போர்டைன் (வயது 61). இவர் சமையல் மட்டுமின்றி எழுத்தாளர், தொலைக்காட்சி பிரபலம் என பன்முகத் தன்மை கொண்டவர்.

    உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு சிறந்த உணவு மற்றும் பானங்கள் குறித்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள அந்தோணி, ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார். அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சியில் ‘பார்ட்ஸ் அன்நோன்’ என்ற சமையல் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு விருதும் பெற்றுள்ளார்.

    இந்நிலையில்,  பிரான்சில் தங்கியிருந்து பார்ட்ஸ் அன்நோன் சீரியலுக்காக பணியாற்றி வந்த போர்டைன் நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மறைவுக்கு சக சமையல் கலைஞர்கள், ஊழியர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு தங்களுக்கு பேரிழப்பு என சிஎன்என் தெரிவித்துள்ளது.

    அந்தோணி மறைவு தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்தோணி மறைவு குறித்த தகவல் அதிர்ச்சி அளித்ததாகவும், அவரது குடும்பத்திற்கு தனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதாகவும் டிரம்ப் கூறினார்.



    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் அந்தோணியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்தோணியின் சீரியலை மிகவும் ரசித்து பார்ப்பதாகவும், கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்ததாகவும் கூறினார். மேலும், வியட்நாம் சென்றபோது அந்தோணியுடன் அமர்ந்து உணவு அருந்தியதையும் ஒபாமா நினைவு கூர்ந்தார்.  #AnthonyBourdain #died
    ×