search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.எஸ்.பி நடவடிக்கை"

    • விளையாட்டு மைதானத்தில், மரங்கள் வெட்டப்படாமல் புதர்போல மண்டி கிடப்பதாக கூறியுள்ளனர்.
    • பள்ளி மைதானத்தை முழுவதும் தூய்மை செய்யும் வரை இந்த பணி நடைபெறும் என அவர் கூறினார்.

    கடலூர்:

    விருத்தாசலம் பெண்ணாடம் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. கோடை விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை பள்ளி திறப்பை முன்னிட்டு பள்ளியில் விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு, பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விழிப்புணர்வு உரையாற்றினார். அப்போது பள்ளி மாணவிகள் தங்கள் பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானத்தில், மரங்கள் வெட்டப்படாமல் புதர்போல மண்டி கிடப்பதாகவும், அதனால் தங்களால் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட முடியாமல் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் சமூக விரோதிகள் சுவர் ஏறி குதித்து வந்தாலும் அதனை கண்காணிக்க முடியாத நிலையில் மரங்கள் புதர் போல சூழுந்து இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனை கேட்டறிந்த டி.எஸ்.பி விருத்தாசலம் போலீஸ் கோட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், ஆலடி, கம்மாபுரம், மங்கலம்பேட்டை மற்றும் கருவெப்பிலங்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலைய ங்களில் பணிபுரியும் காவலர்களை கொண்டு பள்ளியின் மைதானத்தை தூய்மை ப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

    டி.எஸ்.பி ஆரோக்கி யராஜ் தலைமையில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலையில், 20 மகளிர் போலீசார் உட்பட 60க்கும் மேற்பட்ட காவலர்கள் விளையாட்டு மைதா னத்தை தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். பள்ளி மைதானத்தில் மண்டி கிடந்த புதர்கள், புற்கள் உள்ளிட்டவற்றை மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்டவற்றை கொண்டு தூய்மைபடுத்தினர். இது பற்றி டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் கூறுகையில், பள்ளி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகை யில் தூய்மை பணி நடைபெற்றதாகவும், பள்ளி மைதானத்தை முழுவதும் தூய்மை செய்யும் வரை இந்த பணி நடைபெறும் என அவர் கூறினார்.

    ×