search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதி"

    • இந்தியா முழுவதும் 75 நகரங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் எடுத்துவரப்பட்ட இந்த ஜோதி தமிழ்நாட்டுக்குள் கோவை மாநகரத்துக்கு கொண்டுவரப்பட்டது.
    • கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது

    கன்னியாகுமரி :

    44-வது சர்வ தேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி வரை சென்னை மகாபலிபுரத்தில் நடக்கிறது.

    இந்த போட்டியில் 188 உலக நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி பயணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இந்த செஸ் ஒலிம்பியாட்ஜோதி பயணம் கடந்த மாதம்

    19-ந்தேதி காஷ்மீரில் இருந்து புறப்பட்டது. இந்தியா முழுவதும் 75 நகரங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் எடுத்துவரப்பட்ட இந்த ஜோதி தமிழ்நாட்டுக்குள் கோவை மாநகரத்துக்கு கொண்டுவரப்பட்டது.

    அதன்பிறகு கோவையில் இருந்து இந்த ஜோதி பயணம் தொடங்கியது. கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்து உள்ள காந்தி நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 6.50 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தது. கிராண்ட் மாஸ்டர்நிலோபர்தாஸ் ஊர்வலமாக எடுத்து வந்தார்.

    அங்கு மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்ச கம், நேரு யுவகேந்திரா சங்கேதன், தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் குமரி மாவட்ட செஸ் விளையாட்டு கழகம் சார்பில் ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதன் பிறகு அந்த ஜோதியை விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுமூலம் எடுத்துச் சென்றனர். அங்கு அமைச்சர் கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

    அதன் பிறகு அந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை 3 அமைச்சர்களிடமும் செஸ் வீரர் மற்றும் வீராங்கனை கள் வழங்கி ஆசி பெற்றனர்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதன் பிறகு ஜோதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலை வளாகத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டது. அங்கு அந்த ஜோதியை வீரர் மற்றும் வீராங்கனைகள் சிலையை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதன் பிறகு கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

    அங்கு இந்த ஜோதியை வழியனுப்பும் இதில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், மனோ தங்கராஜ் கலெக்டர் அரவிந்த், பிரின்ஸ்எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக சர்வதேச நடுவரும் குமரி மாவட்ட செஸ் விளையாட்டு கழக செயலாளருமான வின்ஸ்டன் வரவேற்று பேசினார்.

    பின்னர் செஸ் ஒலிம்பியாட் ஜோதி தஞ்சாவூருக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு இருந்து சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் சென்னை மகா பலிபுரத்துக்கு 28-ந்தேதி எடுத்து செல்லப்படுகிறது.

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்கிறது
    • விழிப்புணர்வு ஜோதி தமிழகத்தில் கோவையில் தொடங்கி இன்று காலை கன்னியாகுமரி வந்தது

    கன்னியாகுமரி:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்கிறது.

    இந்தப் போட்டி குறித்த விழிப்புணர்வு ஜோதி தமிழகத்தில் கோவையில் தொடங்கி இன்று காலை கன்னியாகுமரி வந்தது. கிராண்ட் மாஸ்டர் நிலோபர் தாஸ், செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஊர்வலமாக எடுத்து வந்தார்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்ட ஒலிம்பியாட் ஜோதியை அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன் ஆகியோர் வரவேற்றனர்.

    • இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா இயக்கத்தில் நடிகை ஷீலா நடித்துள்ள படம் ஜோதி.
    • இப்படம் எமோஷனல் கலந்த கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது.

    இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா இயக்கத்தில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் "ஜோதி". எமோஷனல் கலந்த கிரைம் திரில்லரான இப்படத்தில் நடிகை ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். ஹரி க்ரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜா சேதுபதி தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா பாடல் எழுதியுள்ளார்.

    ஜூலை திரையராங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாடல் "போவதெங்கே" நேற்று தனியார் கல்லூரியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா கூறியதாவது, "இப்படத்திற்கும் எனக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு, எனது சொந்த வாழ்வின் நிகழ்வை இப்படம் பிரதிபலிப்பதால் அனைத்து பாடல் வரிகளும் மிகவும் ஆழமாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமைக்க முடிந்தது. படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் என் வரிகளுக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது. முதல் பத்து நிமிட காட்சியை கண்டு மிரண்டு விட்டேன். இப்படத்தையும், பாடல்களையும் மக்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

    ஜோதி

    ஜோதி

    மேலும், "போவதெங்கே" பாடலை பார்த்த மாணவர்கள் இப்பாடலின் இறுதியில் வரும் கடைசி மூன்று வரிகள் ஒரு ஹைக்கூ கவிதை போன்று இருந்ததாகவும், படத்தை பார்க்க மிகுந்த ஆர்வத்தை தூண்டுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ×