இதற்கும் எனக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு - கார்த்திக் நேத்தா

இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா இயக்கத்தில் நடிகை ஷீலா நடித்துள்ள படம் ஜோதி.இப்படம் எமோஷனல் கலந்த கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது.
ஜோதி - ஷீலா
ஜோதி - ஷீலா
Published on

இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா இயக்கத்தில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் "ஜோதி". எமோஷனல் கலந்த கிரைம் திரில்லரான இப்படத்தில் நடிகை ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். ஹரி க்ரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜா சேதுபதி தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா பாடல் எழுதியுள்ளார்.

ஜூலை திரையராங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாடல் "போவதெங்கே" நேற்று தனியார் கல்லூரியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா கூறியதாவது, "இப்படத்திற்கும் எனக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு, எனது சொந்த வாழ்வின் நிகழ்வை இப்படம் பிரதிபலிப்பதால் அனைத்து பாடல் வரிகளும் மிகவும் ஆழமாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமைக்க முடிந்தது. படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் என் வரிகளுக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது. முதல் பத்து நிமிட காட்சியை கண்டு மிரண்டு விட்டேன். இப்படத்தையும், பாடல்களையும் மக்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

ஜோதி
ஜோதி

ஜோதி

மேலும், "போவதெங்கே" பாடலை பார்த்த மாணவர்கள் இப்பாடலின் இறுதியில் வரும் கடைசி மூன்று வரிகள் ஒரு ஹைக்கூ கவிதை போன்று இருந்ததாகவும், படத்தை பார்க்க மிகுந்த ஆர்வத்தை தூண்டுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com