search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயலலிதா நினைவு நாள்"

    • சிவகங்கை மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    சிவகங்கை

    மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வின் 6-ம் ஆண்டு நினைவு நாள் சிவகங்கை மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டது.

    சிவகங்கை நகர அ.தி.மு.க. சார்பில் செயலாளர் என்.எம்.ராஜா.தலைமையில் நிர்வாகிகள் அரண்மனை வாயில் வழியாக மவுன ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் முன்புள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதில் ஒன்றிய செயலா ளர்கள் ஸ்டிபன்அருள்சாமி, செல்வமணி, நகர் அவைத்தலைவர் பாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் காஜா, சக்தி, மாரிமுத்து, கவுன்சிலர்கள் தாமு, ராபர்ட், கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் மோகன், கேபி.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஜெயலலி தாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் ஏ.வி. நாகராஜன் மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரன் ஆகியோரது தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

    காந்தி சிலையில் இருந்து அண்ணா சிலை வரை ஊர்வலமாக நடந்து சென்று ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் கரு.சிதம்பரம், பேரவை மாவட்ட இணை செயலாளர் சி.எம். முருகேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் சிவமணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அழகர்சாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் பிரேம்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ராஜா முகமது, நகர துணை செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய துணை செயலாளர்கள் சின்னையா, ஆறுமுகம், கவுன்சிலர்கள் பழனியப்பன், சையது ராபின் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர் நகரில் ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளரும், ஆவின் சேர்மனுமான கே.ஆர். அசோகன் தலைமையில் நகரச் செயலாளர் முருகேசன்,ஒன்றிய கழக செயலாளர்கள் நாகராஜன், தேவேந்திரன் கணேசன், சிவா, தொகுதி செயலாளர் பத்மநாதன் முன்னிலையில் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    அவரது படத்திற்கு மலர் தூவி மவுனஅஞ்சலி செலுத்தியதோடு, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில் கல்லல் ஒன்றிய செயலாளர்கள் தென்கரை சுப்பிரமணியன், முருகேசன் பொதுக்குழு உறுப்பினர் செந்தில் வேல், மாவட்ட துணை செயலாளர் தமிழரசி, காரைக்குடி பெருநகர செயலாளர் பாலா, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார், விஜயராஜ்,மாவட்ட பேரவை இணைச்செ யலாளர் திருஞானம், திருப்பத்தூர் நகர் நிர்வாகிகள், ராம ராஜன், ஆனந்த்ராஜ், ராமகிருஷ்ணன், மலைச்சாமி, சரவணன், கணேசன், வெள்ளைக்கண்ணு,விஜயா, மோகன் காதர், ஜோதிபாசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதாவின் படத்திற்கு அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ.-முன்னாள் நகர்மன்ற தலைவர் கற்பகம் இளங்கோ தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதில் மாவட்ட பேரவை ஊரவயல் எஸ்.பி.ராமு, மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், மாவட்ட பேரவை துணை செயலாளர் இயல் தாகூர், மாவட்ட மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், நகர்மன்ற உறுப்பினர்கள் குருபாலு, பிரகாஷ், அமுதா, நகர மகளிரணி செயலாளர் சுலோசனா, வட்ட செயலாளர்கள் சீனிவாசன், சரவணன், விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் என்.ஜி.ஓ. காலனி மற்றும் பர்மா காலனி பகுதிகளில் ஜெயலலிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பி ரமணியன், தேவிமீனாள், ஒன்றிய துணை செயலாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதில் நகர செயலாளர் பாலா, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, நிர்வாகி திருஞானம், மாவட்ட பாசறை செயலாளர் அங்கு ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட ஆவின் சேர்மன் கே ஆர் அசோகன் தலைமையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை மற்றும் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.

    தேவகோட்டை, காரைக்குடியை தொட ர்ந்து திருப்பத்தூரில் மாவட்ட செயலாளர் தலைமையில் திருப்பத்தூர் நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலா ளர்கள் நாகராஜன் தேவேந்திரன் கணேசன், சிவா, தொகுதி செயலாளர் பத்மநாபன் ஏற்பாட்டில் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    இதில் கல்லல் ஒன்றிய செயலாளர்கள் தென்கரை சுப்பிரமணியன், முருகேசன் பொதுக்குழு உறுப்பினர் செந்தில் வேல், மாவட்ட துணை செயலாளர் தமிழரசி, காரைக்குடி பெருநகர செயலாளர் பாலா, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார் விஜயராஜ், மாவட்ட பேரவை இணைச்செ யலாளர் திருஞானம் மற்றும் பலர் பங்கேற்றனர். 

    • நினைவு நாளை ஒட்டி நடந்தது
    • அ.தி.மு.க.வினர் ஏராளமனோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் பொம்மிகுப்பம் ஊராட்சியில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் என்.திருப்பதி தலைமையில் நடந்தது.

    அவர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கருணாகரன், சிவன், டாஸ்மார்க் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் திருப்பதி, சிவக்குமார் பழனி, சுதாகர் உட்பட கிளைக் கழகச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மாவட்டத் பிரதிநிதி பழனி செய்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அ.தி.மு.க.வினர் 4 அணிகளாக தனித்தனியாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

    அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு செல்லும் நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். உறுதிமொழியை அவர் வாசிக்க தொண்டர்கள் திருப்பி சொன்னார்கள்.

    அப்போது, "குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, மக்கள் ஆட்சியை மலர செய்வோம். எதிரிகள் ஒருபக்கம் என்றால் துரோகிகள் மறுபக்கம், சதிவலைகளை அறுத்தெறிவோம்" என்று உறுதிமொழி ஏற்றனர்.

    இதில் அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, கோகுல இந்திரா, நத்தம் விசுவநாதன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செம்மலை, தளவாய்சுந்தரம், சென்னை மாவட்ட செயலாளர்கள் பால கங்கா, விருகை வி.என்.ரவி, கே.பி.கந்தன், வெங்கடேஷ்பாபு, இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், துணை செயலா ளர்கள் இ.சி.சேகர், மலர்மன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×