search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைமன் டவுல்"

    • முக்கிய நேரங்களில் நங்கூரமாக செயல்படுவது அவசியமாகும்.
    • இருப்பினும் வெளியிலிருந்து விமர்சிப்பவர்களின் கருத்துக்களை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன்.

    ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும் லக்னோ அணியும் மோதினர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 61, கேப்டன் டு பிளேஸிஸ் 79, மேக்ஸ்வெல் 59 என ரன்களை குவித்தனர். அதைத்தொடர்ந்து 213 கடந்து லக்னோ போராடி த்ரில் வெற்றி பெற்றது.

    அந்தப் போட்டியில் 6 ஓவர்களில் அதிரடியாக விளையாடி விரைவாக 42 ரன்கள் எடுத்த விராட் கோலி பவர்பிளே முடிந்ததும் ஃபீல்டர்கள் வெளியே நிறுத்தப்பட்டதால் சற்று மெதுவாக விளையாடி அடுத்த 7 பந்துகளில் 8 ரன்களை எடுத்து 50 ரன்கள் தொட்டார்.

    அதனால் அதிருப்தியடைந்த முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் அதிவேக ரயிலை போல தன்னுடைய இன்னிங்சை வேகமாக துவங்கிய விராட் கோலி 42 ரன்களை தொட்டதும் அரை சதமடிக்க வேண்டும் என்பதற்காக சற்று மெதுவாக விளையாடி 10 பந்துகளில் 50 ரன்களை எடுத்ததாக நேரலையில் விமர்சித்தார். குறிப்பாக விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் போது நீங்கள் சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அணிக்காக விளையாட வேண்டும் என்று அவர் விராட் கோலியை விமர்சித்தது இந்திய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது.

    இந்நிலையில் டாப் ஆர்டரில் விளையாடினாலும் நங்கூரமாக நின்று ரன் குவிப்பதே என்னுடைய வேலை என்று விராட் கோலி கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முக்கிய நேரங்களில் நங்கூரமாக செயல்படுவது அவசியமாகும். இருப்பினும் வெளியிலிருந்து விமர்சிப்பவர்களின் கருத்துக்களை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் அவர்கள் அது போன்ற சூழ்நிலைகளில் இருப்பதில்லை. மேலும் அவர்கள் போட்டியை வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறார்கள்.

    அதாவது ஆரம்பத்திலேயே நாங்கள் அதிரடியாக விளையாடுவதை பார்க்கும் அவர்கள் திடீரென்று பவர் பிளே முடிந்ததும் என்னப்பா இவங்க அதிரடியை தொடராமல் ஸ்ட்ரைக் மாற்ற ஆரம்பித்து விட்டார்கள் என்று நினைக்கிறார்கள்.

    ஆனால் பொதுவாக பவர் பிளே ஓவர்களில் நீங்கள் விக்கெட்டுகளை இழக்காமல் இருக்கும் பட்சத்தில் அதில் வீசும் தரமான பவுலர்களுக்கு எதிரான முதல் 2 ஓவர்களில் எப்படி சிறப்பாக செயல்படலாம் என்பதை கண்டறிய வேண்டும். அப்போது தான் அந்த பவுலரின் கடைசி 2 ஓவரில் பெரிய ரன்களை குவிக்க முடியும். அது எஞ்சிய இன்னிங்ஸை மிகவும் எளிதாக்கும்.

    என்று கூறினார்.

    ×