search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிள் ஓட்டும் போட்டிகள்"

    • சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா சைக்கிள் ஓட்டும் போட்டிகள் நாளை மறுநாள் (14-ந்தேதி) காலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
    • இதில் 13 வயதிற்குட்பட்ட வர்கள் 15 கி.மீட்டர், 15, 17 வயதிற்குட்பட்ட வர்கள் 20 கி.மீ. தூரம் கடக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா சைக்கிள் ஓட்டும் போட்டிகள் நாளை மறுநாள் (14-ந்தேதி) காலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

    இப்போட்டி யில் பங்கேற்கும் 13 வயது, 15 வயது மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 1.1.2011, 1.1.2009 மற்றும் 1.1.2007-க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும். இதில் 13 வயதிற்குட்பட்ட வர்கள் 15 கி.மீட்டர், 15, 17 வயதிற்குட்பட்ட வர்கள் 20 கி.மீ. தூரம் கடக்க வேண்டும்.

    அதேபோல் 13 வயது, 15 வயது மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் 1.1.2011, 1.1.2009 மற்றும் 1.1.2007- க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும். இதில் 13 வயதிற்குட்பட்ட வர்கள் 10 கி.மீ. 15,17 வயதிற்குட்பட்ட வர்கள் 15 கி.மீ. தூரம் கடக்க வேண்டும்.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல்ப ரிசாக ரூ.5,000, 2-ம் பரிசாக ரூ.3,000, 3-ம் பரிசாக ரூ.2,000 மற்றும் 4 முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வழங்கப்படும்.

    போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் பள்ளி மாணவ, மாணவிகள் தலைமை யாசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றுடன் போட்டி நடக்கும் தேதிக்கு முன்னரோ அல்லது போட்டி நடக்கும் அன்றோ பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அகல கிராங்க் பொருத்தப்பட்டி ருத்தல் கூடாது.

    சைக்கிள் பந்தயத்தில் ஏதேனும் தனிப்பட்ட பொது இழப்பு ஏற்படின் பங்குபெறும் மாணவ, மாணவியரே பொறுப்பாவர். போட்டியில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை அலுவலக நேரத்தில் அணுகி பெயரினைப் பதிவு செய்து கொள்ளலாம்.

    13 வயதிற்குட்பட்ட மாணவிகள் 10 கி.மீ. தூரத்திற்கு மகாத்மா காந்தி விளையாட்ட ரங்கத்தில் தொடங்கி கோரிமேடு சென்று மீண்டும் மகாத்மா காந்தி விளையாட்ட ரங்கத்தில் நிறைவடைகிறது. 15, 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 15 கி.மீ. தூரத்திற்கு மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் தொடங்கி ஏற்காடு அடிவாரம் வழியாக மீண்டும் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நிறைவடைகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×