search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஸ் தரவரிசை"

    • உலகக் கோப்பை செஸ் போட்டியில் கார்ல்சனிடம் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.
    • பிரக்ஞானந்தா 29-வது இடத்தில் இருந்து 20-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பாகு:

    பிடே உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது.

    இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இறுதிப்போட்டியின் 2-வது சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய டைபிரேக்கர் கடைபிடிக்கப்படுகிறது. டைபிரேக்கரின் முதல் ஆட்டத்தில் தோல்வியும் 2-வது ஆட்டத்தில் டிரா ஆனதால் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    இந்நிலையில் செஸ் உலக தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா 29-வது இடத்தில் இருந்து 20-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு தமிழக வீரர்களான குகேஷ் 8-வது இடத்திலும், விஸ்வநாதன் ஆனந்த் 9-வது இடத்திலும் உள்ளனர்.

    ×