search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செவிலியர்கள்"

    • அரசு மருத்துவமனையுடன் இணைந்து தாய்ப்பால் வார விழா நடத்தப்பட்டது.
    • தலைமை மருத்துவர் பானுமதி ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர்.

    சீர்காழி:

    சீர்காழி ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்கம், அரசு மருத்துவமனை இனைந்து தாய்ப்பால் வார விழா நடத்தப்பட்டது. சங்க தலைவர் சங்கர் தலைமை வகித்தார். டாக்டர் மருதவாணன் முன்னிலை வகித்தார். மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் சிவக்குமார், தலைமை மருத்துவர் பானுமதி ஆகியோர் பங்கேற்று கொழு கொழு குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர். விழாவில் டாக்டர் அருண் ராஜ்குமார், டாக்டர் அறிவழகன், டாக்டர் பூபேஷ் தர்மேந்திரா தாய்ப்பால் மகத்துவம் பற்றி பேசினர். ரோட்டரி மாவட்ட மருத்துவ திட்ட தலைவர் பழனியப்பன், முன்னாள் தலைவர்கள் சோலை, கண்ணன், சுசீந்திரன், சாமிசெழியன், கந்தசாமி, கோவிந்தராஜ், கனகராஜ் மற்றும் செவிலியர்கள், தாய்மார்கள் கலந்துகொண்டனர். முடிவில் செயலர் வசந்த்குமார் நன்றி கூறினார்.

    • பணி மாறுதல் கலந்தாய்வை உடனே நடத்தவேண்டும் என்று செவிலியர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • ஊதியத்தில் மாதம் ரூ. 7 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டு வருவதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாவட்ட கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் இந்திரா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் பாரதி தலைமை தாங்கினார். பொருளாளர் கனகலட்சுமி வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை எம்.ஆர்.பி. மூலம் காலமுறை ஊதிய விகிதத்தில் நியமிக்க வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு முதற்கட்ட பதவி உயர்வான காலியாக உள்ள பகுதி சுகாதார செவிலியர் பணியிடங்களில் நியமிக்க வேண்டும்.

    சமுதாய நல செவிலியர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். மாநில அரசின் முக்கிய திட்டமான எம்.ஆர்.எம்.பி.எஸ். திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக சில்லரை செலவின தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. உடனடியாக இதை வழங்கிட வேண்டும். துணை சுகாதார மைய குடியிருப்பு கட்டிடங்கள் பல ஆண்டுகளாக செயலிழந்து விட்டது. ஆனால் ஊதியத்தில் மாதம் ரூ. 7 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டு வருவதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நகர சுகாதார மையங்களில் தொகுப்பூதியத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட கிராம சுகாதார செவிலியர்களை காலமுறை ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்ய உயர்மட்டக்குழு விவாதித்து வருவதாக அளிக்கப்பட்ட உறுதிமொழியை அமல்படுத்த வேண்டும்.

    ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. உடனடியாக கலந்தாய்வை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×