search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செவிலியர் தின பேரணி"

    • மதுரையில் இன்று செவிலியர் தின பேரணி நடந்தது.
    • கல்லூரி மாணவிகள் ஆகியோர் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    மதுரை

    இத்தாலியில் பிறந்த பிளாரன்ஸ் நைட்டிங்கில் என்பவர் 1900 ஆம் ஆண்டு கால கட்டத்தில் போர் முனையில் காயமடைந்த வீரர்களுக்கு பல்வேறு இன்னல்களுக்கு இடையே சேவையாற்றினார்.

    அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அவரது சேவையை நினைவு கூறும் வகையில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த மே 12-ந் தேதி உலக செவிலியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று செவிலியர் தினத்தை முன்னிட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

    மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் பேரணியை தொடங்கி வைத்தார்.மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கிய பேரணி கலெக்டர் அலுவலகம் வரை சென்று மீண்டும் ஆஸ்பத்திரியை வந்தடைந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். பேரணியில் சேவை குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தமிழ்நாடு செவிலியர் சங்க மாநில செயலாளர் திலகவதி, மாவட்ட தலைவர் ஜெயசத்தியமூர்த்தி, மாவட்ட செயலாளர் செல்வராஜன், பொருளாளர் நாகலட்சுமி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணி முடிந்த பின் செவிலியர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள் ஆகியோர் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ×