search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் கடையில்"

    • செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் லேப்டாப் திருடப்பட்டது.
    • விஜயகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு-மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் லேப்டாப் திருடப்பட்டது. இது பற்றி தெரிய வந்ததும் , ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விரைந்து வந்தனர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடையில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து இருந்தனர். அப்போது கடையின் முன்பக்க கண்ணாடி உடைந்து ரத்த கரை படிந்து இருந்தது. அதையும் கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.

    இதனையடுத்து கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது அதிகாலை 5 மணி அளவில் மர்மநபர் ஒருவர் கையில் அழுக்கு சாக்குடன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், அவர் கடையில் இருந்த விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் லேப்டாப்பை சாக்கு மூட்டையில் போட்டு தப்பி செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் செல்போன்களை திருடிய திருடன் அந்த கடையில் உபயோகப்படுத்தும் செல்போனையும் கையில் எடுத்து சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த செல்போன் எண்ணை வைத்து கண்காணித்தனர். அப்போது அந்த நபர் இருக்கும் இடம் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்தனர்.

    போலீசார் விசாரணையில் அந்த நபர் கன்னியாகுமரி மாவட்டம் சாந்தாபுரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (42) என தெரிய வந்தது.

    அவர் ஈரோட்டில் சில நாட்களாகவே தங்கி தெருவோரம் படுத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். அழுக்கு சட்டை, அழுக்கு வேட்டி அணிந்திருக்கும் அவர் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

    சம்பவத்தன்றும் செல்போன் கடை முன்பு இரவு முழுவதும் படுத்து தூங்கினார். பின்னர் அதிகாலை செல்போன் கடையை உடைத்து கைவரிசை காட்டி உள்ளார்.

    மேலும் விஜயகுமார் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை சென்றுள்ளார். அங்கேயும் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 40-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்களை திருடி சென்றது தெரிய வந்தது.

    திருடிய செல்போன்களை வெளி சந்தையில் விற்று அதன் மூலம் பணம் சேர்த்துள்ளார். தற்போது சி.சி.டி.வி. கேமிரா மூலம் சிக்கி உள்ளார்.

    இதனையடுத்து விஜயகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கொள்ளை நடந்த 4 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×