search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்ட்ரல் ரெயில் நிலையம்"

    • எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து தினமும் 3 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.
    • மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.

    சென்னை:

    எழும்பூர், சென்ட்ரல், ரெயில் நிலையங்களில் நிழல் கூரை இல்லாததால் வெயில், மழையால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் பழமை வாய்ந்த எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களுக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள ரெயில் நிலைய வளாகத்தில் கட்டண வாகன நிறுத்தம் செயல்பட்டு வருகின்றன.

    இங்குள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை கட்டணம் செலுத்தி நிறுத்தி வருகிறார்கள். ஆனால் வாகனங்களுக்கு நிழற்கூரை, எந்தவித பாதுகாப்பும், பராமரிப்பும் இல்லை. இதனால வெயில், மழையால் வாகனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் வாகன பார்க்கிங் பகுதியில் வெயில், மழையால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிழற்கூரை மற்றும் பந்தல் அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பயணி ஒருவர் கூறியதாவது:-

    எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களுக்கு தினமும் ஏராளமான பயணிகள் விரைவு ரெயில், மின்சார ரெயிலில் பயணம் செய்ய மோட்டார் சைக்கிள் மற்றும் கார், வாகனங்களில் வருகின்றனர். எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து தினமும் 3 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த 2 பெரிய ரெயில் நிலையங்களில் உள்ள வாகன பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்தம் செய்து கொள்ள எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால் வாகனங்கள் வெயில், மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கின்றனர். வெளியூர்களுக்கு செல்பவர்களின் இருசக்கர வாகனங்கள் வெயில், மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    எனவே எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் வாகன நிறுத்தங்களில் உடனடியாக கூரைகள் அமைத்து வெயில், மழையால் பாதிக்கப்படும் வாகனங்களை பாதுகாக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்ட்ரல் சதுக்கத்தில் ரூ.400 கோடி செலவில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • பிரமாண்ட 2 டவர் கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    சென்னை மாநகரின் முக்கிய அடையாளமாக சென்ட்ரல் ரெயில் நிலையம் திகழ்கிறது. இங்கு பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

    சென்ட்ரலில் மெட்ரோ, மின்சார ரெயில்நிலையங்கள், பஸ் நிலையங்கள் அனைத்தும் உள்ளன. இங்கு வரும் பயணிகளுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்ட சென்ட்ரல் சதுக்கம் பயணிகளிடம் வரவேற்பு பெற்று உள்ளது. நடைபாதைகள், ஓய்வு இருக்கைகள், சுரங்க நடைபாதைகள், புல்வெளிகள் ஆகிய பல்வேறு வசதிகளை பயணிகள் ஆர்வமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    சென்ட்ரல் சதுக்கம் திட்டத்தின் மேலும் ஒரு பகுதியாக 2 டவர் கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்ட்ரல் சதுக்கத்தில் ரூ.400 கோடி செலவில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரமாண்ட 2 டவர் கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் 3 அடித்தளம், ஒரு தரை தளம், 15 மாடிகளுடன் டவர் கட்டிடம் அமைக்கப்படுகின்றன. 600 கார்கள், 1,600 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வகையில் பூமிக்கு கீழே பிரமாண்ட வாகன நிறுத்தம் வசதி அமைக்கப்பட உள்ளது. தற்போது இந்த பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    மேலும் 7 மாடிகளுடன் இன்னொரு டவர் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதில் 'ஷாப்பிங்மால், தியேட்டர்கள், விளையாட்டு திடல்கள், வணிக நிறுவன அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் பல சிறப்பு அம்ச வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • கடந்த சில நாட்களாக 4 கவுண்டர்களில் மட்டுமே முன்பதிவு டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
    • முன்பதிவில்லா டிக்கெட் வினியோக கவுண்டர்களும் ஊழியர்கள் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு விட்டது.

    சென்னை:

    சென்னையில் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களான எழும்பூர், சென்ட்ரலுக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் காலை, இரவு என எப்போதும் இந்த ரெயில் நிலையங்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன.

    இங்கு பயணிகள் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய எழும்பூரில் 8 முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட்டு வந்தது. அதேபோல் சென்ட்ரல் நிலையத்தில் 10 முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட்டன. இதன் மூலம் பயணிகளுக்கு முன்பதிவு டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கணினி பழுது, ஊழியர்கள் பற்றாக்குறை என பல்வேறு கவுண்ட்டர்கள் மூடப்பட்டது. தானியங்கி டிக்கெட் எந்திரம், செல்போன் செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின் மேலும் சில கவுண்டர்கள் மூடப்பட்டது.

    கடந்த சில நாட்களாக 4 கவுண்டர்களில் மட்டுமே முன்பதிவு டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதே போல முன்பதிவில்லா டிக்கெட் வினியோக கவுண்டர்களும் ஊழியர்கள் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு விட்டது.

    இதனால் டிக்கெட் எடுக்க காலதாமதம் ஏற்படுகிறது. ரெயிலை தவற விடும் நிலை உருவாகிறது. மேலும் முன்பதிவு டிக்கெட் எடுக்க வரும் பல பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காமல் போகும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது:-

    சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

    ரெயில்களுக்கு முன்பதிவில்லா டிக்கெட் எடுக்க கூட்டம் எப்போதும் அலைமோதும். அவசர பயணமாக செல்லும் பயணிகள் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து அதிகஅளவில் பயணம் செய்வார்கள்.

    தற்போது முன்பதிவில்லா டிக்கெட் மைய கவுண்டர்கள் குறைக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் பெரும் சிரமப்படுகிறார்கள்.

    டிக்கெட் வாங்க வரிசையில் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே முன்பதிவு, முன்பதிவில்லா டிக்கெட் கவுண்டர்களில் விரைவில் ஊழியர்களை கூடுதலாக உடனடியாக நியமிக்க வேண்டும். அப்போது தான் முன்பதிவு டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட்டுகள் எளிதில் பெற முடியும்.

    தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் இருந்தாலும் அதில் ஒரே நேரத்தில் டிக்கெட் பெற வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் பெறும் வசதியை குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான பயணிகள் கவுண்டர்களில் டிக்கெட் பெறுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே ரெயில் டிக்கெட்டை பயணிகள் சிரமம் இல்லாமல் பெற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×