search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றி திரிந்த சிறுத்தை"

    • நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் காமிராக்கள்.
    • அடா்ந்த வனப் பகுதிக்குள் வனத்துறையினா் விடுவித்தனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள அரக்காடு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை கடந்த மாதம் சிறுத்தை தாக்கிக் கொன்றது. அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கண்காணிப்பு கேமராக்களில் 2 சிறுத்தைகளின் நடமாட்டம் பதிவாகியிருந்தது.

    இதனையடுத்து, அப்பகுதியில் வனத்துறையினா் சாா்பில் 2 கூண்டுகள் வைக்கப்பட்ட நிலையில், ஒரு சிறுத்தை மட்டும் சிக்கியது. அதனை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்று அடா்ந்த வனப் பகுதிக்குள் வனத்துறையினா் விடுவித்தனா்.

    மற்றொரு சிறுத்தை கிராம பகுதிக்குள் சுற்றி வந்து விளைநிலங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால் மக்கள் அச்சத்துடனேயே வசித்து வந்தனர். மேலும் அந்த சிறுத்தையும் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அந்த சிறுத்தை மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்துள்ளது. வெகுநேரமாக அங்கேயே சுற்றி திரிந்த சிறுத்தை பின்னர் வனத்திற்குள் சென்றுள்ளது.

    இந்த காட்சிகள் அப்பகுயில் உள்ள குடியிருப்பில் பொருத்தப்ப–ட்டிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

    எனவே குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வரும் சிறுத்தையை கண்காணித்து, கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இதனைத் தொடா்ந்து, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் 4-க்கும் மேற்பட்ட தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிப்புப் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

    • கரடி, காட்டெருமை, சிறுத்தை, கடமான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
    • சில வாகன ஓட்டிகள் சிறுத்தையை செல்போனில் வீடியோ எடுத்தனர்.

    ஊட்டி:

    ஊட்டியை சுற்றி தொட்ட பெட்டா, கவர்னர்சோலை, கேர்ன்ஹில், உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை, கடமான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்புகளுக்கு புகுந்து வருகின்றது. இந்தநிலையில் நேற்று ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை பைக்காரா பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடியது.

    தொடர்ந்து சிறுத்தை சாலையை கடக்க முயற்சி செய்தது. அப்போது வாகனங்கள் வந்து கொண்டு இருந்ததால், வாகனங்கள் செல்லும் வரை சாலையோரத்திலேயே நின்றது. மேலும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சில வாகன ஓட்டிகள் சிறுத்தையை செல்போனில் வீடியோ எடுத்தனர்.

    பின்னர் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையில் நிற்கும் போது வாகனங்களை விட்டு கீழே இறங்கக்கூடாது. வனவிலங்குகள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

    ×