search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரங்க விபத்து"

    • 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

    பெஷாவர்:

    பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம் ஒரக்சாய் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் மேற்பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தபோது, எரிவாயு தீப்பற்றியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    சுரங்க இடிபாடுகளில் இருந்து 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கனிம வளத்துறை அதிகாரிகள் கொண்ட குழு, சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

    மேகாலயா மாநிலத்தின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நீச்சல் வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழுவினர் 2வது சடலத்தை மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர். #Meghalayacoalmine #NavyDivers
    ஷில்லாங்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது.

    தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி பொந்து’ என்று அழைக்கப்படுகிறது.

    கடந்த டிசம்பர் 13-ம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர்.

    ரிமோட் மூலம் இயங்கக்கூடிய சாதனத்தினைக் கொண்டு கடலுக்கடியில் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு பணியின்போது கடந்த மாதம் ஒரு உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அதன்பின்னர் சுமார் 370 அடி ஆழத்தில் மேலும் 4 உடல்கள் அழுகி எலும்புக் கூடுகளாக கண்டறியப்பட்டன. அதில், ஒரு உடல் நேற்று மீட்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.  #Meghalayacoalmine #NavyDivers
    மேகாலயா மாநிலத்தின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நீச்சல் வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழுவினர் மேலும் ஒரு சடலத்தை கண்டுபிடித்துள்ளனர். #Meghalayacoalmine #NavyDivers
    ஷில்லாங்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது.

    சுரங்கத்தில் விபத்து ஏற்படும்போது, உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால், உள்ளூர் மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கருதி, இந்த சுரங்க நிர்வாகம் வேறு மாநில தொழிலாளர்களையே பணி அமர்த்துவது வழக்கம். தற்போது, அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிகிறது.

    தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி பொந்து’ என்று அழைக்கப்படுகிறது.

    கடந்த டிசம்பர் 13-ம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர்.

    இதனையடுத்து 150 அடி ஆழத்தில் ஒரு எலும்புக் கூடு மீட்கப்பட்டது. 370 அடி ஆழத்தில் மற்றொரு சடலம் கடந்த மாதம் மீட்கப்பட்டது. இதேபோல் நேற்று மேலும் ஒரு சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக கடற்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். உடல் முழுவதும் அழுகி எலும்புக்கூடாக கிடந்துள்ளது. அதனை வெளியே கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் இந்த மீட்புப் பணிகளை கண்காணித்து வருகிறது. மேலும் இவ்வழக்கு இன்று  விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Meghalayacoalmine #NavyDivers

    நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் கடற்படை வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழு 42 நாட்களுக்குப் பிறகு ஒரு சடலத்தை மீட்டுள்ளனர். #Meghalayacoalmine #NavyDivers
    ஷில்லாங்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் ‘லிட்டின்’ என்ற ஆறு ஓடுகிறது.

    சுரங்கத்தில் விபத்து ஏற்படும்போது, உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால், உள்ளூர் மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கருதி, இந்த சுரங்க நிர்வாகம் வேறு மாநில தொழிலாளர்களையே பணி அமர்த்துவது வழக்கம். இதனையடுத்து அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

    தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி பொந்து’ என்று அழைக்கப்படுகிறது.

    கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கி தீவிர நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில் நீருக்கடியில் செல்லும் ரோபோ மூலம் தேடுதல் பணி நடந்தது. அப்போது எலி பொந்து சுரங்கத்தின் வாசலில் ஒரு சடலம் சிதைந்த நிலையில் கண்டறியப்பட்டது. அந்த உடலை இன்று சுரங்கத்தில் இருந்து மேலே எடுத்தனர். மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடலை அடையாளம் காண உறவினர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 42 நாட்கள் தீவிர தேடுதலுக்குப்பின் இந்த சடலம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Meghalayacoalmine #NavyDivers
    ராஜஸ்தானில் சுரங்கப்பாதையை சுத்தம் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெய்பூர் :

    ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் உள்ள சுரங்கப்பாதையை சரி செய்யும் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொக்லைன் இயந்திரத்தின் அதிர்வு காரணமாக சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் சுரங்கப்பாதையில் பணியில் இருந்த 4 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக பேசிய அம்மாவட்ட ஆட்சியர் பாபு லால் மீனா, உயிரிழந்தவர்களுக்கு தனியார் நிறுவனம் உரிய இழப்பீடு வழங்கும் வரை உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பதாக தெரிவித்தார்.

    இந்த  விபத்து சம்பந்தமாக நிறுவன உரிமையாளர் மற்றும் பொக்லைன் ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ×