search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார பணி"

    • சுகாதார பிரச்சினைகளை சரி செய்து சுகாதாரம் குறித்து இந்த அமைப்பு மூலம் உடனுக்குடன் தீர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
    • புதிய அமைப்பின் முதல் கூட்டம் 149 வார்டு ஆழ்வார் திருநகர் திரு.வி.க. பூங்காவில் நடந்தது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக கோட்ட சுகாதார பேரவை என்ற புதிய அமைப்பு வார்டு வாரியாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் வார்டில் உள்ள பொதுமக்கள் ஏரியா சபை உறுப்பினராக 10 பேரும், சுகாதார ஆய்வாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மாநகராட்சி மருத்துவர்கள் ஆகியோர் இருப்பார்கள்.

    வார்டில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் உள்ள சுகாதார பிரச்சினைகளை சரி செய்து சுகாதாரம் குறித்து இந்த அமைப்பு மூலம் உடனுக்குடன் தீர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த புதிய அமைப்பின் முதல் கூட்டம் 149 வார்டு ஆழ்வார் திருநகர் திரு.வி.க. பூங்காவில் நடந்தது. கூட்டத்தில் மாநகராட்சி உறுப்பினர் செல்லி ரமேஷ், சுகாதார துறை அதிகாரி ராபர்ட் ரமேஷ், சபை உறுப்பினர் முத்துராமன் மற்றும் வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், மாநகராட்சி மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்படி அடுத்து நடைபெற இருக்கும் மண்டல கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு பின்னர் மொத்த வார்டுகளையும் சேர்த்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும்.

    மாநகராட்சியின் இந்த புதிய திட்டம் வார்டுகளில் உள்ள சுகாதார குறைபாட்டை உடனுக்குடன் தீர்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×