search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவ பத்மநாதன்"

    • மருதமுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அதனை நிரப்ப வேண்டும் என மனு வைக்கப்பட்டுள்ளது.
    • அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததாக தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் கூறியுள்ளார்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவ பத்மநாதன் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தென்காசியில் தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வருகிற துணை இயக்குனர் மருத்துவ அலுவலகம் போதிய இட வசதி இல்லாமலும் மருத்துவ அலுவலர்கள் அமர்வதற்கு கூட இடமில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதால் தென்காசி மாவட்ட துணை இயக்குனர் அலுவலகத்தை தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு வடபுறம் இருக்கிற இடத்தில் அமைக்க வேண்டும் என்ற துணை இயக்குனர் அலுவலக ஒப்புதலுடன் கூடிய கோரிக்கை மனுவை வழங்கினார்.

    அதேபோல ஆலங்குளம் ஒன்றியம் மருதமுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை என்றும், பெண் மருத்துவர் இல்லை, அலுவலக உதவியாளர் பல்நோக்கு உதவியாளர் போன்ற பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அதனை நிரப்ப வேண்டும் என்றும் ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா சுதாகர் கொடுத்த கோரிக்கை மனு மற்றும் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் இயங்கி வருகிற அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லை. கூடுதல் படுக்கை வசதிகள், கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி சுந்தரபாண்டியபுரம் பேரூர் செயலாளர் பண்டாரம், பேரூராட்சி தலைவர் காளியம்மாள் செல்வகுமார் கொடுத்த மனுவையும் சேர்த்து அமைச்சரிடம் வழங்கினார்.

    மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள் வதாக தெரிவித்ததாக தி.மு.க. மாவ ட்ட பொறுப் பாளர் சிவ பத்மநாதன் கூறியுள்ளார்.

    ×