search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுபான்மை மக்கள்"

    • விருதுநகர் மாவட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.
    • 14-ந் தேதி சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினர்களுக்கு மதத்தைச் சார்ந்த பொருளா தாரத்தில் பின்தங்கிய நிலை யில் உள்ள மக்கள் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்து கொண்டி ருக்கும் தொழிலை விரிவு படுத்தியும், தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளா தார மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சிறுவணிகக்கடன், கல்விக்கடன், கறவை மாட்டு கடன் மற்றும் ஆட்டோ கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இக்கடன் திட்டங்கள் தொடர்பான விவரங்களையும் சந்தேகங்களையும் தெளிவு படுத்திக்கொள்ளவும் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் ஏதுவாக 2023- 2024-ம் நிதியாண்டிற்கான கடன் வழங்கும் முகாம் வட்டார அளவில் வருகிற 10-ந் தேதி அன்று விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 11-ந்தேதி காரியாபட்டி வட்டாட் சியர் அலுவலகத்திலும், 12-ந்தேதி அருப்புக்கோட்டை வட்டாட் சியர் அலுவலகத்திலும், 13-ந்தேதி திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 14-ந் தேதி சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.

    இதேபோல் 17-ந்தேதி ராஜபாளையம் வட்டாட்சி யர் அலுவலகத்திலும், 18-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் வட் டாட்சியர் அலுவலகத்தி லும், 19-ந்தேதி சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தி லும், 20-ந்தேதி வெம்பக் கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 21-ந்தேதி அன்று வத்ராப் வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் கடன் தேவைப்படும் சிறுபான்மையின மக்கள் கடன் தொகை பெற உரிய ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க. ஆதரவு என்ற பொய் பிரசாரம் தவிடுபொடியாகி விட்டது.
    • தமிழ் நாட்டை ஆதரித்தும் இரட்டை அர்த்தங்களால் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    முதுகுளத்தூர்

    பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் ராம நாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு வந்தார். அங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து அவரை ஊர்வ லமாக அழைத்துச் சென்று நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.

    பின்னர் வேலூர் இப்ராகிம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 2024பாராளு மன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தாமரையில் வெற்றிபெறும் வகையில் மாநில தலைவர அண்ணாமலையின் வழிகாட்டுதலின்படி பாடுபட்டு வருகிறோம்.

    தி.மு.க.வின் ஊழலை, அராஜக போக்கை எதிர்த்து பா.ஜ.க. போராடி வருகிறது. இஸ்லாமியர்களுக்கு தி.மு.க. ஆதரவு நிலை என்பது தவிடுபொடியாகிவிட்டது. தி.மு.க. அரசு தொடர்ந்து ஊழலை செய்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முஸ்லிம் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்க ஒதுக்கப்பட்ட இடங்களை தி.மு.க.வினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனை மீட்க ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்துள்ளோம். போலீசாரை நடவடிக்கை எடுக்கவிடாமல் தி.மு.க. அரசு தடுக்கிறது.

    தி.மு.க. அரசு ஆளுநரை இழிவு படுத்த முடிவு செய்து விட்டது. தமிழ் நாட்டை ஆதரித்தும் இரட்டை அர்த்த ங்களால் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்கள். காவல்துறை மூலம் பா.ஜ.க.வினர் மீது அடக்குமுறையை பயன்படுத்துகிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தல் தி.மு.க.வுக்கு அதிர்ச்சியாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ராம்குமார், மாவட்ட வக்கீல் பிரிவு துணை தலைவர் சிவராம கிருஷ்ணன், எம்.சி.ரமேஷ் ராணுவ அணிசெந்தூ 

    • 66 பேருக்கு தலா ரூ.6ஆயிரம் என மொத்தம் 102 பேருக்கு ரூ.6 லட்சத்து 12 ஆயிரம் நிதி உதவி
    • “ஒன்றிணைவோம் வா” என்று அழைப்பு விடுத்ததின் மூலம் 100 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டு மக்களுக்காக செலவு செய்யப்பட்டு உள்ளது

    நாகர்கோவில் :

    சிறுபான்மை நலத்துறை சார்பில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முஸ்லிம் உதவும் சங்கங்கள் சார்பில் 17 பேருக்கு தையல் எந்திரங்களும், 19 பேருக்கு மாவு அரைக்கும் எந்திரங்களும் இதர தொழில் தொடங்க 66 பேருக்கு தலா ரூ.6ஆயிரம் என மொத்தம் 102 பேருக்கு ரூ.6 லட்சத்து 12 ஆயிரம் நிதி உதவியை அவர் வழங்கினார்.

    கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் 5 பேருக்கு தையல் எந்திரமும் 26 பேருக்கு மாவு அரைக்கும் எந்திரமும் சிறு தொழில் தொடங்க 3 பேருக்கு தலா ரூ. 6 ஆயிரம் என மொத்தம் 34 பேருக்கு ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்பட்டது.

    மேலும் உலமாக்கள் நல வாரிய புதிய உறுப்பினர் அட்டையையும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கி னார். சிறுபான்மையினர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 41 பெண்களுக்கு ரூ.12 லட்சத்து 15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.

    இன்று நடந்த விழாவில் 183 பேருக்கு ரூ.20 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    சிறுபான்மை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் கடந்த ஒராண்டில் பல்வேறு திட்டங்களை செய்து முடித்துள்ளார். 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காக உழைத்து வருகிறார். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் "ஒன்றிணைவோம் வா" என்று அழைப்பு விடுத்ததின் மூலம் 100 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டு மக்களுக்காக செலவு செய்யப்பட்டு உள்ளது.

    தடுப்பூசி மூலம் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையில் தமிழகம் முழுவதும் கொரானா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பெரிய வர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார்.

    அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட த்தில் இது போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்ட த்திற்கு அதிகமான நிதி கிடைக்க நான் முயற்சி மேற்கொள்வேன். குமரி மாவட்டம் கல்வி அறிவில் சிறந்து விளங்கும் மாவட்டமாகும். கல்வியின் மூலமாகத்தான் வாழ்வா தாரத்தை உயர்த்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா கலந்து கொண்டார்.

    ×